JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

50 ஆண்டுகள் சினிமாவை ஆட்சி செய்த 'ஆச்சி... மனோரமா பிறந்த நாள் நினைவலைகள்

தமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை 'ஆச்சி' மனோராமா. 5 முதல்வர்களோடு நடித்தவர். 5 தலைமுறையினரோடு நடித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். நாடக நடிகையாக, சினிமா நாயகியாக, காமெடி நடிகையாக, குணசித்திர நடிகையாக, வில்லியாக, பாடகியாக, சின்னத்திரை நடிகையாக , தயாரிப்பாளராக அவர் எடுத்த அவதாரங்கள் அதிகம். இன்று அவரது பிறந்த நாள். வியாபார சினிமா வேகத்தில் அவர் பிறந்த நாள் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியாது. ஆச்சியை நாம் நினைவுகூர்வோம்.தஞ்சை மாவட்டம் ராஜமன்னார்குடி தான் ஆச்சி அவதரித்த ஊர். ஆச்சியின் தந்தை காசினாக் உடையார் அந்த ஏரியாவில் குட்டி தாதா, சாரயக்கடை, கள்ளுக்கடை, பில்டிங்க காண்டிராக்ட் கட்டப்பஞ்சாயத்து என்று திரிந்தார். ஆச்சியின் அம்மா ராமாமிர்தத்தின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அப்புறம் என்ன அம்மாவுக்கு தங்கை கொடுமை, மனோரமாவுக்கு சித்தி கொடுமை அதை தாங்க முடியாமல் செட்டிநாட்டில் உள்ள பள்ளத்தூருக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள் தாயும் மகளும்.அம்மா வீட்டு வேலை செய்தார். இட்லிக்கடை வைத்தார். அம்மாவுக்கு துணையாக மனோரமா முருக்கு வியாபாரம் செய்தார். மனோரமாவின் அப்பா அப்போது ஊர் ஊராக டெண்ட் கொட்டகை நடத்தி சினிமா போட்டார். அவர் பள்ளத்தூரிலும் சினிமா கொட்டகை போட்டார். அப்பா நடத்திய கொட்டகையில் மகள் முருக்கு விற்றதுதான் காலக் கொடுமை. தியேட்டரில் முருக்கு விற்ற விட்டு படத்தை பார்ப்பார். அந்த படத்தின் வசனங்களையும், பாடல்களையும் வீட்டில் பாடி பார்ப்பார் இப்படித்தான் நடிப்பாற்றலையும் பாடும் திறனையும் வளர்த்துக் கொண்டார்.உள்ளூர் கோவில் திருவிழாவில் பாட ஆரம்பித்தார். பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி குரல் கொடுத்தார். பிறகு அவரே நடிக்க ஆரம்பித்தார். அக்கம் பக்கத்தில் பிரபலமானார். பள்ளத்தூர் பாப்பா என்று அழைக்கப்பட்டார். விதியின் விசித்திரம் என்ற நாடகத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அதன் பிறகுதான் கோபிசாந்தா என்ற பெயர் மனோரமா ஆனது. யார் மகன் என்ற நாடகம்தான் மனோரமா ஹீரோயினாக நடித்த முதல் நாடகம்.மணிமகுடம் நாடகத்தில் மனோரமாவின் நடிப்பை பார்த்து வியந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரை சென்னைக்கு அழைத்து வந்து தி.மு.க பிரச்சார நாடகங்களில் நடிக்க வைத்தார். உதயசூரியன் என்ற நாடகத்தில் கருணாநிதிக்கு ஜோடியாக நடித்தார். அப்போது தி.மு.கவில் இருந்த கவியரசர் கண்ணதாசன் அவர் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் காமெடி நடிகையாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் 1958ம் ஆண்டு வெளிவந்தது. அன்று துவங்கிய அவரது பயணம் 50 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்தது. 1963ம் ஆண்டு கொஞ்சும் குமரி, அலங்காரி, பெரிய மனிதர், அதிசய பெண் படங்களில் ஹீரோயினியாக நடித்தார். பிறகு அவரே தன்னை காமெடி நடிகையாக மாற்றிக் கொண்டார். பொம்மலாட்டம் படத்தில் வா வாத்யாரே வூட்டாண்ட பாடலை சென்னை தமிழில் பாடினார். அன்று முதல் பாடகியாகவும் வலம் வந்தார். குன்வாரா பாப் என்ற இந்திப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். 2002ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்ட்டார். காலத்தை வென்று நிற்கும் இந்த மாபெரும் கலைஞரை போற்றுவோம்.

Read 12401 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…