JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

அடடே! சமந்தாவின் காதலர் இவரா?

சமந்தாவின் காதலர் யாராக இருக்கும் என்பதுதான் இப்போதைக்கு இளசுகள் அனைவரின் கேள்வியாக இருக்கும். சும்மாவா சமந்தாவாச்சே..!

சித்தார்த்துடனான காதல் தோல்விக்குப் பிறகு அமைதியாக இருந்துவந்த சமந்தா, தற்போது இளம் நடிகர் ஒருவரிடம் தனது மனதை பறிக்கொடுத்திருக்கிறார் என்ற செய்தி பரவிவருகிறது.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது ஒன்று அல்ல இரண்டு நடிகர்களின் பெயர்கள் அடிபடிகிறது. அதுவும் தமிழ் நடிகர்கள் அல்ல தெலுங்கு மனவாடுகள். இவர்களில் ஒருவரைத்தான் சமந்தா தற்போது தீவிரமாக காதலித்துவருவதாக சொல்லப்படுகிறது.

முதலாமவர் நிதின். கேரியரைப் பொறுத்தவரை சமந்தாவைவிட மிகவும் இளையவரான நிதினுடன் சமந்தா தற்போது ‘அ..ஆ..’ என்ற தெலுங்குப் படத்தில் தற்போது நடித்துவருகிறார். நிதினுடன் இணைந்து சமந்தா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வெளியானபோதே இவ்வளவு சின்ன ஹீரோவுடன் முன்னணி ஹீரோயினான சமந்தா நடிக்கிறாரா என அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், விஷயம் தற்போது ‘அதுக்கும் மேல..’ என வளர்ந்து நிற்கிறதாம். படத்தில் இருவருக்கும் இடையே செம கெமிஸ்ட்ரி உருவாகியிருக்கிறதாம். இந்த கெமிஸ்ட்ரிதான் தற்போது காதலாக மாறியிருக்கிறது என்கிறார்கள் தெலுங்கு திரையுலகின் ஒரு தரப்பினர்.

இன்னொரு தரப்பினரோ.. இல்லை இல்லை.. நிதின் இல்லை ரானாவுடன்தான் சமந்தா ரொமான்ஸ் செய்துவருகிறார் என்கிறார்கள். எஸ்.. திரிஷாவின் முன்னாள் காதலரான அதே ராணாதான். ராணாவுடன் சமந்தா இணைந்து நடித்த ‘பெங்களூர் நாட்கள்’ படப்பிடிப்பு காலத்தின்போது இருவருக்கும் பற்றிக்கொண்டதாக சொல்கிறார்கள் அவர்கள்.

ஆக, சமந்தா காதலிப்பது இவர்களில் ஒருவரைத்தான் என்பது என்னவோ உண்மையாகத்தான் தெரிகிறது. அது யாரென்று சமந்தாதான் தெளிவுப்படுத்தவேண்டும்.

Read 1078 times
Tagged under
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…