JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

வசூலில் களை கட்டும் ‘கவண்’
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள படம் கவண். ஹி ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் 320-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸான ‘கவண்’ படம் கடந்த வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் தமிழகம் முழுக்க ரூ. 10.17 கோடி வசூல் பெற்றுள்ளது.

இத்தகவலை ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா வெளியிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. 
 
விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் சூப்பர் ஹிட் படம் என்றால் அது கவண் தான். விஜய் சேதுபதியின் வேறெந்தப் பாடமும் முதல் மூன்று நாள்களில் இந்த வசூலைப் பெற்றதில்லை. 
 
 
Image result for tamil film kavan stills images
 
விஜய் சேதுபதியின் கேரியரிலேயே மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ள படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வார நாட்களிலும் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகின்றது என  பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். 

மார்ச் 31-ம் தேதி வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ் நிறுவனம், தாங்களே நேரடியாக விநியோகம் செய்துள்ளது. தணிக்கையில் 'யு' சான்றிதழ், வரிச்சலுகை என அனைத்துமே 'கவண்' படத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இப்படம் வெளியான முதல் நாளில் 3.1 கோடி வசூல் செய்திருப்பதாகவும், இரண்டாவது நாளில் பல்வேறு திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Read 449 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…