தாயம் என்ற படத்தை இயக்கிய கண்ணன் ரங்கசாமி இன்று காலை (29 அக்டோபர்) மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்,
அவருக்கு வயது 29. கடந்த மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கோமாவில் இருந்து, கிட்டத்தட்ட 40 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
இன்று காலை அவரது வீட்டில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கண்ணன் ரங்கசாமி இன்னும் திருமணம் ஆகாதவர். இளம் வயதில் இவர் இறந்தது கோலிவுட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.