JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

அருவி 2017 -ன் மிகச் சிறந்த தமிழ் படம்

தமிழ் சினிமாவில் வழக்கம்போல இந்த ஆண்டிலும் கிட்டத்தட்ட 190 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. அவற்றில் பல படங்கள் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் தாக்குப்பிடிக்காத படங்கள். இந்த வருடத்தை சினிமாவின் சோதனைக் காலம் என்றே கூறலாம். இணையதள பைரசி விவகாரம் ஜி.எஸ்.டி சிக்கல், கேளிக்கை வரி விதிப்பால் சினிமா டிக்கெட் விலை அதிகரிப்பு என பல பிரச்னைகள் நிகழ்ந்தன. இத்தனை சிக்கல்களைக் கடந்தும் நல்ல படங்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டன.  Image result for அறம் தமிழ் படம் புகைப்படங்கள்

அருவி

இந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்து தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை உயர்த்திருக்கிறது 'அருவி'. புதுமுக இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், அறிமுக நடிகை அதிதி பாலன் மற்றும் சிலபேரை வைத்துக்கொண்டு எடுத்த படம் பரவலான பாராட்டைப் பெற்றிருக்கிறது. சிற்சில குறைகள் இருந்தாலும் ரசிகர்கள் அருவியைக் கொண்டாடினார்கள்... குதூகலித்தார்கள். நிஜமான காட்சி அனுபவத்தைக் கொடுத்த 'அருவி' இந்த வருடத்தின் சிறந்த படம்.

அறம்

முன்னணி நாயகியான நயன்தாரா, தனது மார்க்கெட் ரோலுக்கு ஏற்றபடியில்லாமல், துணிந்து இறங்கி அசத்திய படம் 'அறம்'. சமூகத்தின் அவலநிலையையும், அரசின் இயலாமையையும் பொட்டில் அடித்தாற்போல பேசிய 'அறம்' தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம் என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்தில்லை.

குரங்கு பொம்மை

த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த 'குரங்கு பொம்மை' பேசியது மனிதம். தந்தை, மகனுக்கு இடையேயான உறவினை அத்தனை உணர்வுப் பூர்வமாகக் காட்டியிருந்தது இந்தப் படம். குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான காட்சியமைப்புகள், திரைக்கதைகளின் வழியாகவே சிறப்பான ஒரு படத்தை எடுக்க முடியும் என எதிர்காலத்திற்கு நம்பிக்கை விதைக்கக்கூடிய சினிமாவாக அமைந்தது 'குரங்கு பொம்மை'.

தீரன் அதிகாரம் ஒன்று

உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 'தீரன் அதிகாரம் ஒன்று' உருவாக்கத்தில் பட்டையைக் கிளப்பியது. கலக்கலான ரொமான்ஸில் தொடங்கி திரைக்கதையில் வேகம் கூடிய தீரன் ரசிகர்களை மிரட்டினான். தமிழக காவல்துறை மீது பலருக்கும் இருந்த அபிப்ராயத்தை மாற்றி நல்ல சினிமாவாகவும் ஜெயித்தது 'தீரன்'.

விக்ரம் வேதா

புஷ்கர் - காயத்ரி இயக்கிய 'விக்ரம் வேதா' படம் ரசிகர்களுக்கு த்ரில் ட்ரீட் கொடுத்தது. விஜய் சேதுபதியும், மாதவனும் நடிப்பில் மிரட்ட, தனித்துவமான திரைக்கதையால் கவனம் ஈர்த்தது 'விக்ரம் வேதா'. கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்து முடிச்சை அவிழ்த்தது, கெத்தான வசனங்கள் என கம்பீரம் காட்டிய 'விக்ரம் வேதா'வும் இந்த ஆண்டின் ஸ்பெஷல். Image result for அறம் தமிழ் படம் புகைப்படங்கள்

லென்ஸ்

சைபர் குற்றங்கள் இந்தியா முழுக்க அதிகரித்திருக்கும் வேளையில், நம்மிடையே உலவும் குற்றவாளிகளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்த வந்தது 'லென்ஸ்'. வெகு சாதாரணமாக புழங்கி வரும் சைபர் க்ரைம் கலாச்சாரம், அதனால் ஏற்படும் அதீத பாதிப்புகளை எளிமையாக, நிதானமாகச் சொல்லி அசத்திய வகையில் 'லென்ஸ்' மிக முக்கியமான சினிமா.

மாநகரம்

மாநகரத்தின் மீதான அச்சமும், சங்கடங்களும் தான் வெளியூரிலிருந்து வருபவர்களின் முக்கியச் சிக்கல். புதிதாக சென்னைக்கு வருபவர்களைப் பற்றி இதுவரை பல படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து தனித்துத் தெரிந்தது. நறுக் வசனங்கள், நல்ல திரைக்கதை என கவனம் ஈர்த்த 'மாநகரம்' படமும், குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

தரமணி

ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடித்து வெளிவந்த 'தரமணி' பெரும் விவாவத்திற்கு உள்ளானது. ரிலீஸுக்கு முன்பும், படத்திலும் அரசியலையும், அரசையும் கடுமையாக விமர்சனம் செய்த இந்தப் படம் விமர்சக ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. பரவி வரும் நவீன கலாச்சார யுகத்தில் மனிதத்திற்கான தேவையை நறுக்கென சொன்ன வகையில் 'தரமணி' தரமான சினிமா.

ஒரு கிடாயின் கருணை

மனு உயிர்களின் முக்கியத்துவத்தை பிரச்சார நெடி இல்லாமல் உயிர்ப்புடன் சொன்ன படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. அசலான கிராமத்து மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும் அழகாகப் பதிவு செய்த தமிழ் சினிமா என்ற வகையில் இந்தப் படம் சிறந்த படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும். 

பாகுபலி - 2

பிரமாண்ட மேக்கிங், பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரமாண்டம் 'பாகுபலி 2'. சஸ்பென்ஸ் என எளிதில் யூகிக்கிக்கூடிய முடிச்சை மட்டுமே முதல் பாகத்தில் வைத்திருந்தாலும், அடுத்த பாகத்தையும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு குறை வைக்காமல் எடுத்த விதத்தில் ராஜமௌலி செம கெத்து. குழந்தைகள், பெரியவர்கள் என சகலரையும் ஈர்த்த இந்தப் படம் இந்திய சினிமா வரலாற்றில் மாபெரும் வசூல் மைல்கல்.


Read 342 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…