JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

பாலாவின் 'நாச்சியார்' பிப்ரவரி 16ஆம் தேதி ரிலீஸ்

பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த மாதமே முடிந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படம் சென்சாருக்கும் சென்று 'UA' சான்றிதழ் பெற்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் பிப்ரவரி 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடிதுள்ளனர். ஈஸ்வர் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலாவின் 'B ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Read 112 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…