JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 00:00

ஏப்ரலுக்கு தள்ளிப்போகிறது ரஜினியின் ‘2.0’

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0', 2018-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 3டி கேமராவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட படம் என்பதால், இதற்குக் கிராபிக்ஸ் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதற்காக உலகம் முழுவதும் சுமார் 13 நிறுவனங்கள் பணியாற்றி வருகிறார்கள்.

'2.0' இசை வெளியீட்டு விழாவில் கூட 2018 ஜனவரி வெளியீடு என்று உறுதிப்படுத்தியது படக்குழு. ஆனால், சில நாட்களாகவே திட்டமிட்டபடி கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால், ஜனவரி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி ஏப்ரலில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால், படக்குழு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வத் தகவலுமே வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், "இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில், '2.0' ஏப்ரல் மாதமே வெளிவரும்" என்று லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனவரி 26-ம் தேதி வெளியீட்டிலிருந்து '2.0' பின்வாங்கியுள்ளதால், அந்தத் தேதியில் தற்போது பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதிசெய்யத் திட்டமிட்டு வருகின்றன.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…