வியாழக்கிழமை, 09 ஆகஸ்ட் 2018 00:00
தடை நீக்கம் : இன்று வெளியாகிறது விஸ்வரூபம் 2
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் எந்த தடையும் இன்றி விஸ்வரூபம் 2 நாளை வெளியாகவுள்ளது.
ஆனால், படம் முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2013 ஆம் வெளியாக விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களில் கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோர் அடக்கம்.
Published in
சினிமா