JoomlaLock.com All4Share.net

Background Video

விஜய்யின் 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்துக்கு  சர்க்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக முக்கிய வேடத்தில், வரலட்சுமி நடிக்கிறார்.
 
இது, அரசியல் சார்ந்த கதை என்பதால், நிறைய ‘பஞ்ச்’ வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விஜய் மற்றும் படக்குழுவினர் அமெரிக்கா செல்கிறார்கள்.
 
நேற்று மாலை நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இது விஜய் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
 
இந்தநிலையில்  நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாம் போஸ்டர் நள்ளிரவில் வெளியானது.
Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…