JoomlaLock.com All4Share.net

Background Video

ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக  நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ரஜினிகாந்த் தற்போது அரசியல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஒருபுறம், அடுத்த படத்திற்காக சில இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். அதில், தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ, அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூவரும் அடக்கம். 
 
இறுதியில் ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜே இயக்குகிறார் என செய்தி வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
 
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவல் உறுதிசெய்யப்படவில்லை. இதனால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 
Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…