JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 00:00

விஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி

தமிழில் கூட வசூல் பரவாயில்லை. ஆனால் இந்தியில் நஷ்டம்... நஷ்டம்.. நஷ்டம்தான் என்று வேதனைக்குரல்கள் எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் சென்ற வாரம் வெளியானது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியானது இந்த படம்.

தமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் 25 கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்தது. தமிழில் ஓரளவுக்கு வந்த வசூல் கூட இந்தியில் வரவில்லை. 25 முதல் 30 கோடி ருபாய் நஷ்டமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் படம் சர்ச்சையில் சிக்கியதால்தான் பிளாக்பஸ்டர் ஆனது. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு எந்த வித விளம்பரமும் செய்யவில்லை. அதனால் தான் வட இந்தியாவில் விஸ்வரூபம் 2 ஓடவில்லை என்கின்றனர்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…