JoomlaLock.com All4Share.net

Background Video

ஞாயிற்றுக்கிழமை, 25 பிப்ரவரி 2018 00:00

ஸ்ரீதேவி மறைவு : பிரபலங்கள் இரங்கல்

தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார். 

இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். 

தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார். 

சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி : ஸ்ரீதேவியின் மரணம் எனக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. எனது உண்மையான நண்பரையும், திரையுலகம் நல்ல நடிகையையும இழந்து விட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல் : அவரது இளமை காலம் முதல் அவருடன் இருந்திருக்கிறேன். அவருக்கான இடத்தை அடைய அவர் கடுமையாக உழைத்தார். அவருடன் நடித்த மகிழ்ச்சிகரமான நாட்களை சோகத்துடன் நினைவு கூர்கிறேன். மூன்றாம் பிறை படத்தில் அவர் நடித்த தாலாட்டுப் பாடல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

இயக்குநர் பாரதிராஜா : ஸ்ரீதேவி இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரின் சிரிப்பு நம் கண்ணைவிட்டு மறையவில்லை. தெற்கில் இருந்து இந்திக்கு சென்ற நடிகைகளில் மிகச்சிறப்பான வெற்றி பெற்றவர் ஸ்ரீதேவி.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் : ஸ்ரீதேவியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்

நடிகை ராதா : நடிகை ஸ்ரீதேவியின் மறைவை என்னால் நம்ப முடியவில்லை.

நடிகர் அக்ஷய்குமார் : நடிகை ஸ்ரீதேவியின் மறைவு துரதிஷ்டவசமானது.

நடிகை நக்மா : நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை நம்ப முடியவில்லை. மிகவும் வருத்தம் அளிக்கிறது.

கிரிக்கெட் வீரர் சச்சின் : நடிகை ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…