JoomlaLock.com All4Share.net

Background Video

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பெயரிடப்படாத புதிய படத்தில் அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்துக்கு செக்கச்சிவந்த வானம் என தலைப்பு வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

'செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். வரும் 12-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…