JoomlaLock.com All4Share.net

Background Video

மிர்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நைனா சர்வார் நடிக்கும் படம் 'அட்ரா மச்சான் விசிலு'. வருகிற 7ந் தேதி வெளிவருகிறது. கன்னட படங்களில் நடித்து வரும் நைனா சர்வார், தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். "நல்ல கதையும் கேரக்டரும் என்றால் பவர் ஸ்டாருக்கு ஜோடியாகவும் நடிக்கத் தயார்" என்கிறார். அவர் மேலும் கூறியதாவது: என் சொந்த ஊர் பெங்களூர். பி.காம்., ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே கன்னடத்தில் நான்கு படங்கள் முடித்துவிட்டேன். அட்ரா மச்சான் விசிலு எனக்கு முதல் தமிழ்ப் படம். நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான ஒரு ரோல். எனக்கு தமிழைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம். அதனால் செட்டில் எல்லோருடனும் பேச சிவாதான் உதவினார். நானும் இயக்குநரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம். இந்தப் படத்தில் நடித்திருக்கும் பவர் ஸ்டார் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் எனக்கும் சேர்ந்த மாதிரி சீன்கள் இல்லை. அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன். ஜோடியாகவும் தான். இதில் தயக்கம் ஏதுமில்லை. அட்ரா மச்சான் விசிலு பாடல் புரமோஷன் பார்த்து விட்டு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எதையும் ஏற்கவில்லை. மனசுக்குப் பிடிச்ச மாதிரி பாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன். என்கிறார் நைனா சர்வார்

Published in சினிமா

அட்ரா மச்சான் விசிகூ திரைப்படம் ரம்ஜான் விடுமுறை காலமான வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கான புரமோசன் வேலைகளை ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டனர்.

சிவா, பவர் ஸ்டார் நடிப்பில் வெளிவரும் படம் அட்ரா மச்சான் விசிலு. இப்படத்தின் டிக்கெட்டை இலவசமாக பெற நீங்கள் ஒன்று செய்தால் போதும் அது வேறு ஒன்றும் இல்லை, விசில் அடிக்கிற மாதிரி வீடியோ அல்லது போட்டோ எடுக்க வேண்டுமாம்.

ஃபேஸ்புக் அல்லது டுவிட்டரில் அப்லோடு செய்து #AdraMachanVisilu or @AdraMachanVisilu Tag பண்ண வேண்டுமாம். தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு தலா 2 டிக்கெட் வழங்கப்படும்.

சென்னை ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்

விசில் அப்லோடு போட்டி சென்னை தியேட்டர்களுக்கு மட்டுமே. இந்த போட்டி ஜூலை 7ஆம் தேதி வரை மட்டுமே. ஜூலை 8 முதல் டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர் அட்ரா மச்சான் விசிலு படக்குழுவினர்.

டுவிட்டரில் டிரெண்ட்

போட்டி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே #AdraMachanVisilu ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. தொடர்ந்து விசில் அடித்து ரசிகர்கள் அப்லோடு செய்து வருவதால் டுவிட்டரில் சென்னையில் டிரெண்ட் ஆகி வருகிறது.

பஞ்ச் டயலாக்

இந்த படத்தில் பவர் ஸ்டார் பவரான வில்லனாக நடித்துள்ளாராம். அவர் பேசியிருக்கிற பஞ்ச் டயலாக்கை இனி தமிழ்நாடே பேசும் என்கிறார் பவர்ஸ்டார். குழந்தைங்க இனி என் பஞ்ச் டயலாக்தான் பேசுவாங்க என்றும் கூறுகிறார் பவர் ஸ்டார்.

ஹீரோயின் கொடுக்கலையே

பவர் ஸ்டாருக்கு ஒரு மனக்குறை இருக்கிறது. எந்த படத்துலையும் ஹீரோயின் தரமாட்டுறாங்க... ஐட்டம் சாங் ஆட விட்டாலும் தனியா ஆட விடுறாங்கப்பா என்று கவலைப்படுகிறார்.

பவர் பிறந்தநாள் தேசிய நாள்

பவர்ஸ்டார் பிறந்தநாளை தேசிய நாளாக அறிவிக்க வேண்டும் என்று இந்த படத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் சிவா.சிவாவிற்கு தனது மனமார்ந்த நன்றியை கூறியுள்ளார் பவர் ஸ்டார்.

Published in சினிமா

எனக்குப் போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று மேடைக்கு மேடை சொல்லி வந்தவர்தான் பவர்ஸ்டார். அதோடு ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் எனது லட்சியமே என்றும் கூறி வந்தார். ஆனால் அவர் ஒரு காமெடியன் என்பதால் யாருமே அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சமீபத்தில் நயன்தாரா, அனுஷ்காவுடன் ஜோடி சேருவதுதான் எனது லட்சியமே என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதைக் கேட்டு அவருக்கு நன்கு பரிட்சயமான சந்தானம், மிர்ச்சி சிவா உள்ளிட்ட சில ஹீரோக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.ஆனால் அவர்கள் அதோடு விடவில்லையாம். பவர்ஸ்டாருக்கு போன் போட்டு, செமத்தையாக கலாய்த்து விட்டார்களாம். இவர்களில் மிர்ச்சி சிவா தனக்கு பவர்ஸ்டாரின் ஞாபகம் வரும்போதெல்லாம் போன் செய்து கலாய்க்கிறாராம். அப்போது, பெரிய பெரிய விசயங்களைகூட சாதாரணமாக பேசுகிறீர்களே. இதையெல்லாம் நீங்கள் தெரிந்துதான் பேசுகிறீர்களா இல்லை தெரியாமல் பேசுகிறீர்களா? என்று வேறு அவரை கேட்கிறாராம். இப்படி அவர் குறுக்க மறுக்க கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் இப்போது அவர் போன் செய்தாலே தெறித்து ஓடுகிறாராம் பவர்ஸ்டார்.

Published in சினிமா

என் படத்தில் ரஜினியை நாங்கள் கிண்டல் செய்யவில்லை. அவர் இமயமலை என்றால்.. நாங்கள் பரங்கிமலை என்று இயக்குநர் திரைவண்ணன் கூறினார்.

ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் என்ற படத்தை இயக்கியவர் திரைவண்ணன். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படம் இயக்கியுள்ளார். அட்ரா மச்சான் விசிலு என்ற அந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, சீனிவாசன் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகியாக நைனா சர்வார் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் சிவா, சீனிவாசன், இயக்குநர் திரைவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசுகையில், 'கச்சேரி ஆரம்பம் படத்துக்குப்பிறகு ஐந்து வருடம் கழித்து இந்தப்படத்தை இயக்கிருக்கேன்.

இந்தப்படத்துக்கு கதாநாயகி தேடிப்பார்த்து, இங்கே எதுவும் அமையாம, கடைசியா பெங்களூர்ல கிடைச்ச தேவதைதான் இந்த நைனா சர்வார். கதை சொல்லியெல்லாம் அவங்களை ஒப்பந்தம் செய்யல.. வந்தபிறகுதான் கதை கேட்டாங்க. மதுரை பொண்ணு கேரக்டரை சரியா புரிஞ்சு நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஆங்கிலம் தெரியாது.. ஷூட்டிங் ஸ்பாட்ல எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மொழிபெயர்ப்பு பண்றதுல சிவா தான் ஒரு உதவி இயக்குனர் மாதிரி செயல்பட்டார்.

இந்தப் படத்துல ராஜ்கபூர், செல்வபாரதி, ஜெகன், டி.பி.கஜேந்திரன்ன்னு நான் உள்பட மொத்தம் ஆறேழு இயக்குனர்களை நடிக்க வச்சிருக்கேன். குறிப்பா சொல்லணும்னா நான் யார்கிட்ட எல்லாம் வாய்ப்பு கேட்டு போனேனோ, யாருகிட்ட வேலை பார்த்தேனோ அந்த டைரக்டர்களை எல்லாம் இதுல நடிக்க வச்சுருக்கேன்.. இந்தப்படத்தோட கதையை வெறும் 20 நிமிடம் மட்டும் கேட்ட தயாரிப்பாளர் கோபி இதை உடனே தயாரிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்துட்டார்.

கச்சேரி ஆரம்பம்னு சொன்னாலே அடுத்து அட்ரா மச்சான் விசிலுன்னு தான் சொல்வாங்க... ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கச்சேரிய ஆரம்பிச்சு வச்ச எனக்கு இப்பத்தான் அட்ரா மச்சான் விசிலுன்னு சொல்ல நேரம் வந்திருக்கு.

இந்தப்படத்துல நானும் மூணு பாட்டு எழுதியிருக்கேன்.. அதுக்கு காரணம் இசையமைப்பாளர் ரகுநந்தன் தான். அதேமாதிரி இந்தப்படத்தோட ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா என்கிட்டே வந்து நடிக்க சான்ஸ் கொடுங்க சார்னு கேட்டார். நான் நடிக்க சான்ஸ் கொடுத்து, ஒளிப்பதிவும் பண்ண வச்சிருக்கேன்,' என்றார்.

இந்தப் படம் ரஜினியைக் கிண்டலடிப்பதாக ஒரு பேச்சு இருக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த திரைவண்ணன், 'எப்படி ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் இவங்கள்ல ஒருத்தரை வில்லனா காட்டுறோமோ, அதே போலத்தான் ஒரு நடிகனை வில்லனா காட்டியிருக்கோம்.. அவ்வளவுதான். பவர் ஸ்டார் சீனிவாசன்தான் வில்லத்தனம் பண்ணிருக்கார். இது எந்த நடிகரையும் குறிப்பிட்டு பண்ணலை. ரஜினி சாரை கிண்டல் பண்ற மாதிரி எந்த காட்சியும் இல்ல. நாங்க அவ்வளவு பெரிய ஆளுமில்ல.. அவரு இமயமலை.. நாங்க வெறும் பரங்கிமலை,' என்றார்.

மிர்ச்சி சிவா, சீனிவாசன், சென்ராயன், இசையமைப்பாளர் ரகுநந்தன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

Published in சினிமா

சென்னை: எனக்குப் போட்டியே ரஜினிதான் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். 'வாங்க வாங்க' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் அப்புக்குட்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சீனிவாசன் பேசும்போது ''சினிமாவில் முன்பெல்லாம் சில்க்கை அதிகமாக கூப்பிட்டார்கள்.இப்போது என்னை அதிகமாக கூப்பிடுகிறார்கள். இதனால் நான் ஆம்பள சில்க்கா இல்லை பொம்பள சில்க்கா என்று எனக்கே தெரியவில்லை. இன்று நான் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் பட்ட கஷ்டங்கள் தான். இப்போது எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதனால் சினிமாவிற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது. சினிமாவில் எனக்குப் போட்டியாக நான் கருதுவது ரஜினியைத் தான். ரஜினி இன்று இந்த நிலையில் இருக்க அவர் பட்ட கஷ்டங்களே காரணம் என்பது எனக்குத் தெரியும். அவர் போலவே நானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சீனிவாசன் சமீபத்தில் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…