JoomlaLock.com All4Share.net

Background Video

ரசிகர்களை 2 மாதங்கள் கழித்து மீண்டும் சந்திப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு ரஜினி காந்த் மௌனத்தையே பதிலாக அளித்தார். எனினும் ரசிகர்கள் தீபாவளி, பொங்கல், ரஜினி பிறந்தநாள் ஆகிய தினங்களில் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிவர்.

இதனிடையே  ரஜினியின் 164- ஆவது படமான காலா கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 10 நாள்கள் மும்பை தாராவி பகுதியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்  இன்னும் 2 மாதங்கள் கழித்து ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பேன். வரும் 24-ஆம் தேதி காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன என்றார் அவர்.

மேலும் அரசியல் பிரவேசம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டபோது அதை சிரித்தபடியே தவிர்த்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.

 

Published in தமிழகம்

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. ‌ஷங்கர் இயக்கி இருக்கும் இதில், அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இதன் கிராபிக்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இதில் எராளமான ஹாலிவுட் நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

ரூ. 400 கோடி செலவில் தயாராகி வரும் இதை அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் மிக பிரமாண்டமாக உருவாக்கப்படுகிறது. பாகுபலி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இது போல் பல்வேறு நாடுகளில் சாதனை படைத்த தங்கல் படம் தற்போது சீனாவிலும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

2.0 படமும் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். தமிழ் இந்தியில் உருவாகி வரும் 2.0படத்தை மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் உலகில் அதிகமாக பேசப்படும் சீன மொழி உள்பட 15 மொழிகளில் 100க்கும் அதிகமாக நாடுகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

ஹாலிவுட் படத்துக்கு இணையான முதல் இந்திய படம் இது என்று சொல்லும் வகையில் ‘2.0’ தயாராகி வருகிறது. இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத விதத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published in சினிமா

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றிய செய்திகளையே ஊடகங்கள் தற்போது முன்னிறுத்தி வருகின்றன. 

கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி "இங்கே சிஸ்டம் சரியில்லை. நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்" என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இந்நிலையில் இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்குகிறது.

அதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு புறப்புட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு பதிலளித்த ரஜினி "காலா படப்பிடிப்பிறாக மும்பை செல்கிறேன். சினிமாவில் நடிப்பது என் வேலை.

இது உங்களின் வேலை.

எனது வேலையை செய்ய விடுங்கள். அரசியலுக்கு வருவது பற்றி விரைவில் அறிவிப்பேன்" என சற்று கோபமாக கூறி விட்டு சென்றார்.

 

Published in சினிமா

: போர் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்ற நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

கடந்த 21 ஆண்டுகளாக ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

எனினும் அவர் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது கடந்த 5 நாள்களாக ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக சில கருத்துகளை தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது ரசிகர்கள் தெரிவிக்கையில் ரஜினியை நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளோம். தமிழகத்தில் நடந்து வருவதை உன்னிப்பாக கவனித்து வந்தார்.

பொறுத்து பொறுத்து பார்த்தார். இன்று பொங்கி எழுந்துவிட்டார். முடிவு பண்ணிட்டார். இனி அவருதான் எல்லாமே. அரசியலுக்கு வந்தால் நிரந்தர முதல்வராக இருப்பார் என்றனர் ரசிகர்கள்.

கோடம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடைசி நாளான நேற்று ரஜினி பேசுகையில் முதல் நாள் நிகழ்ச்சியில் சிலவற்றை பேசினேன். அது இந்தளவுக்கு சர்ச்சையாகும் என்று நினைக்கவில்லை.

இன்னும் பேசிக் கொண்டிருந்தால் அது மேலும் சர்ச்சையாகிவிடும் என்பதால் ஊடக நண்பர்களையும் நான் சந்திக்க முடிவதில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் ராஜாக்களிடம் படை பலம் இருக்கும் பெரிய அளவில் இருக்காது. ஆனால் போர் வரும் எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவர். அதுவரை அவரவருக்கான வேலைகளை கடமைகளை செய்து கொண்டிருப்பார்கள். எனக்கும் கடமை இருக்கிறது.

நீங்கள் ஊருக்கு புறப்படுங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்.

 

Published in அரசியல்
வியாழக்கிழமை, 18 மே 2017 00:00

ரஜினியைக திமுக காப்பாற்றியதா....

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரணுமா - வேண்டாமா? சமூக வலைத்தளங்கள் பத்திரிகைகள் தொடங்கி சந்து பொந்தில் இருக்கும் டீ கடைவரை இபோதைய ஹாட் டாபிக் இதுதான்!

வந்தால் யார் வீட்டுக் குடி முழுக்கப் போகிறது? அரசியலுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்! தமிழர்கள் நலனுக்காக என்னைக்காவது போராடினாரா? ....னாரா?....னாரா? என்று கேள்விகளாக அடுக்கித் தள்ளுகிறார்கள்!

ஒரு மனிதன் அரசியலுக்கு வர ஓட்டுரிமை இருந்தால் போதும்! அவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கான விடையை தேர்தலின் போது மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அதை விடுத்து கன்னடத்துக்காரர் எங்களை எப்படி ஆள அனுமதிக்க முடியும் என்பது பிரதான குமுறலாக இருக்கிறது!

நடிக்க வந்த நாள் தொட்டு இன்றுவரை சூப்பர் ஸ்டாராக இருக்கக் கூடிய ஒரே நடிகர் உலகத்திலேயே ரஜினி மட்டும்தான்! சோட்டா பீம் பார்க்கிற வாண்டுகளில் தொடங்கி நாற்பதைத் தாண்டிய நடுத்தர வயது ஆளுக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார்.கடந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனையோ அரசியல் கட்சிகள் உடைந்து சிதறியிருக்கிறது! ரஜினி மன்றத்தில் ஏதாவது ஒரு மன்றம் கலைக்கப்பட்டதாக செய்தி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நடிகர் சங்க எலக்சன் நடந்தபோதும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்தபோதும் ஒரு தெலுங்கன் எப்படி பதவிக்கு வரலாம் என்று பொதுத் தேர்தல் அளவுக்கு பரபரப்பும் முட்டுக்கட்டையும் போடப்பட்டது! மாற்றம் வேண்டும் என்று நினைத்த உறுப்பினர்கள் விசாலை ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.இந்த இரண்டு ஆண்டுகளில் விசால் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அடுத்த தேர்தலின் ரிசல்ட் இருக்கும்.

கடந்த ஐம்பதாண்டு கால திராவிட அரசியலில் மக்களுக்கு என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது? கட்சி அறக்கட்டளைகளின் சொத்துக்கள் கூடியிருக்கிறது அவ்வளவுதானே!

ரஜினி நடிகனாக இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எங்களை ஆள நினைக்கக் கூடாது என்பது இன்னொரு குற்றச்சாட்டு. நெடுவாசலில் போராடிய பெண் தோழர்களை சிறைத் துறை அதிகாரிகள் மிக மோசமான முறையில் நடந்து கொண்டது தெரிந்த பிறகு, இன்று சமூக வலைதளங்களில் பொங்கும் போராளிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக என்ன செய்தார்கள்? மார்க் ஒரு பிளாட்ஃபாம் போட்டுக் கொடுத்தார் என்பதற்காக 22 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு தெரியாமல் ரஜினியை சீண்டுபவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

1991-1995 இடைப்பட்ட காலங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலம்! ஜெ தலைமையில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பாராட்டு விழா. அந்த மேடையில் வைத்தே சிவாஜிக்கு உரிய மரியாதை செய்யவில்லை என்பதை மேடையில் ஜெ இருக்கும்போதே தைரியமாகச் சுட்டிக்காட்டினார். திரைப்பட நகருக்கு எம்ஜிஆர் அல்லது சிவாஜி பெயரைச் சூட்டாமல் உங்கள் பெயரை (ஜெஜெ) சூட்டிக் கொண்டது தவறு என்றார். ஆடிப் போனார்கள் மேடையில் இருந்தவர்கள். பம்பாய் படம் எடுத்ததற்காக இயக்குனர் மணிரத்தினம் வீட்டில் குண்டு வீசப்பட்டது. சக கலைஞர் என்ற முறையில் பாட்சா பட விழாவில் - 'தமிழ் நாட்டில் வெடிகுண்டுக் கலாசாரம் அதிகரித்துவிட்டது' என்று சொன்னார் ரஜினி.

கொதித்துவிட்டார் ஜெயாலலிதா. அதன் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டுக்கு போகக்கூட ரஜினியிடம், ஐடி கார்ட் இருந்தால்தான் அனுமதிப்போம் என்று சொன்னது அப்போதைய ஜெ அரசு!

அப்போது நடந்த தேர்தலில் கிங் மேக்கர் ரஜினிதான். அதை எவராலும் மறுக்க முடியாது! 91 தேர்தலில் அதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்திருந்தாலும், ஜெயலலிதாவின் போக்கு பிடிக்காமல் எதிர்கட்சியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது.

96 தேர்தல் நேரத்தில் அதிமுகவோடுதான் மீண்டும் கூட்டணி என்று அறிவித்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். தனது நண்பரான மூப்பனாரைச் சந்தித்து திமுகவோடு கூட்டணி வையுங்கள் என்று சொல்கிறார் ரஜினி. டெல்லி தலைமை அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக இல்லை என்று பதில் தருகிறது!

நரசிம்மராவை நேரில் சந்தித்து திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய சூழல் பற்றி எடுத்துச் சொல்கிறார். 'நீங்கள் ஸி எம் கேண்டேட்டாக இருந்தால் வெளியில் வருகிறோம்' என்று நரசிம்மராவ் வைத்த கோரிக்கையை மறுத்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினி.

அதன் பிறகு பத்திரிகையாளர் சோ, மூப்பனார், ரஜினி மூவரும் கலந்தாலோசிக்கிறார்கள். 27 நாட்களுக்குள் காங்கிரசிலிருந்து விலகி, தமாக என்றொரு புதிய கட்சியைத் தொடங்குகிறார் மூப்பனார். ரஜினி சொன்னார் என்பதற்காகத்தான் காங்கிரசை விட்டு வெளியில் வந்தேன் என்று சத்யமூர்த்தி பவனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே சொல்கிறார்.

அந்தப் பரபரப்பான காலகட்டங்களை தொடர்ச்சியாகப் பதிவு செய்தது சுதேசமித்திரன். அதற்கு இப்போதும் நடமாடும் சாட்சியாக இருப்பவர் தினகரன் நாழிதளின் முன்னாள் ஆசிரியர் கதிர்வேல்.

திமுக ஆட்சிக்காலத்தில் சில அமைச்சர்கள் செய்த அடாவடி காரணமாக மக்கள் திமுக, அதிமுக இரண்டு கட்சியின் மீதும் கோபத்தில் இருந்த நேரம் அது! தவிர வைகோ திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி, பத்திரிகைகளின் ஆதரவைப் பெற்றிருந்த சமயம் அது. அதில் திமுகவிற்கு கணிசமான இழப்பும்கூட! இந்த சூழலில்தான் திமுக - தமாக கூட்டணி உறுதியாகிறது.

இத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய லீக், அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் ஒரு பிரிவு ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரணியாகவும் திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பி ஜே பி தனித்துப் போட்டியிட்டது.

சுப்ரமணிய சாமியின் ஜனதா காட்சி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இந்த சூழலில்தான் சன் தொலைகாட்சியில் திமுக - தாமகா கூட்டணியை ஆதரித்து வாய்ஸ் கொடுக்கிறார் ரஜினி. தமிழ் நாடு முழுக்க உள்ள ரசிகர்களை இந்தக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அதாரவாக தேர்தல் பணி ஆற்ற வேண்டுகோள் வைத்தார். அவர்களும் பரபரப்பாக களம் இறங்கி வேலை பார்த்தார்கள். காட்சி மாறியது. திமுக ஆட்சிக்கு வந்தது. இதற்கெல்லாம் காரணமான ரஜினிக்கு தமிழகமே நன்றிக் கடன்பட்டிருப்பதாக மூப்பனார் கூறினார். ஆனால் ஒப்புக்குக் கூட ரஜினிக்கு நன்றி சொல்லவில்லை கருணாநிதி / திமுகவினர் என்பதே உண்மை.

காங்கிரசை விட்டு வெளியில் வந்து புதுக்கட்சி தொடங்கி முதல் தேர்தலில் தமாக 39 சீட் வாங்கியதில் ரஜினியின் பங்கில்லாமல் எப்படி! ஆக,ரஜினி அரசியலுக்கு புதியவரும் அல்ல!அவரது ரசிகர்களுக்கு தேர்தலும் புதிதல்ல!!

 

Published in அரசியல்
பக்கம் 1 / 5
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…