JoomlaLock.com All4Share.net

Background Video

ரசிகர்களை 2 மாதங்கள் கழித்து மீண்டும் சந்திப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு ரஜினி காந்த் மௌனத்தையே பதிலாக அளித்தார். எனினும் ரசிகர்கள் தீபாவளி, பொங்கல், ரஜினி பிறந்தநாள் ஆகிய தினங்களில் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிவர்.

இதனிடையே  ரஜினியின் 164- ஆவது படமான காலா கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 10 நாள்கள் மும்பை தாராவி பகுதியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்  இன்னும் 2 மாதங்கள் கழித்து ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பேன். வரும் 24-ஆம் தேதி காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன என்றார் அவர்.

மேலும் அரசியல் பிரவேசம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டபோது அதை சிரித்தபடியே தவிர்த்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.

 

Published in தமிழகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது.

முதல் பாகம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தை காண மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஐதராபாத்தில் பாகுபலி - 2 படத்துக்குக்கான டிக்கெட் ரூ. 5,000 க்கு விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in சினிமா

கடந்த படம் போகன் இவருக்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. அடுத்து இவர் நடித்து வரும் படம் வனமகன் இந்த படத்தில் காட்டு பழங்குடியினராக நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருக்கு வசனமே கிடையாது  என்பது மேலும் சிறப்பு மட்டும் இல்லை இவரின் நடிப்புக்கு ஒரு சவால் என்று தான் சொல்லணும்.

‘போகன்’ படத்தைத் தொடர்ந்து மிருதன்  படத்தை இயக்கிய  சக்தி செளந்தரராஜன் இயக்கும் டிக் டிக் டிக் மற்றும் விஜய் இயக்கத்தில் வனமகன் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி.

விஜய் இயக்கத்தில் உருவாகும் வனமகன்  படத்தில் சாயிஷா சைகல் நாயகியாக நடித்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள்ளும், தாய்லாந்து மற்றும் சென்னையில் சில முக்கிய காட்சிகளும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. பேராண்மை படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

வனமகன்  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தை கோடை விடுமுறை வெளியீடாக மே 12 - ம் தேதி வெளியிட படக்குழு முடிவு வெளியாகும் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போது ஒரு வாரம் தள்ளி மே 19ம் தேதி வெளியாகும் என ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Published in சினிமா

இயக்குநர் பொன் ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’ படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இதை சி.வி.குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

துப்பறிவாளன், இரும்புத் திரை, கறுப்பு ராஜா வெள்ளை ராஜா, ஆகிய படங்களுக்குப் பிறகு ‘நாளை நமதே’  படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.

ஏற்கெனவே விஷால் 3 கதாபாத்திரங்களில் நடித்த மதகஜராஜா படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் நாளை நமதே படத்தில் 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்க உள்ளார். கதாநாயகிகள் தேர்வு பிற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விஜய்61 படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

 

Published in சினிமா
வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017 00:00

மே 1 ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!

அஜித்தின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் டீஸர் அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இதனால் சமூக வலைதளத்தை டாக்குகள் மூலம் திணறடிக்க ரசிகர்களும் தயாராகி விட்டனர்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவல்படி டீஸர் மட்டும் இல்லாது ஒரு பாடலின் டீஸரும் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

 

Published in சினிமா
பக்கம் 1 / 7
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…