JoomlaLock.com All4Share.net

Background Video

தெறி படத்தின் வெற்றிக்குப்பின் இரண்டாவது முறையாக அட்லீயின் பெயரிடப்படாத படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கிறார் விஜய் இது கிராம நாட்டாமை டாக்டர் மேஜிக் செய்பவராக நடிக்கிறாராம்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய் அப்பா இரு மகன்கள் என்ற இந்த காம்பினேஷனில் பண்ணையாராக நடிக்கிறார் அப்பா. ஒரு மகன் டாக்டர் எனவும், இன்னொரு மகன் போலீஸ் எனவும் சொல்லப்பட்டது. 

 

ஆனால் அதில் உண்மை இல்லையாம்.

டாக்டராக ஒரு மகனும் வித்தை காட்டும் மேஜிக் கலைஞராக இன்னொரு மகனும் நடித்திருக்கிறார்களாம். டாக்டர் விஜய்க்கும்  காஜல் அகர்வாலுக்கும் இடையேயான காட்சிகளைத் தற்போது ஐரோப்பாவில் படமாக்கி வருகிறார் அட்லீ. 

அப்படியானால் மேஜிக் கலைஞருக்குத்தான் சமந்தா ஜோடியாக இருக்க முடியும் என்கிறார்கள்.

Published in தமிழகம்

இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்களிடம் ஒரு டச்சிலேயே இருப்பவர். இவர் அவ்வபோது டுவிட்டரில் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.

அப்படி சில வருடங்களுக்கு முன்பு விஜய் தன் ரசிகர்களுடன் பேசுகையில் அஜித் பற்றி கூறுங்கள்’ என கேட்க  அதற்கு அவர் மிகவும் அழகான ஹீரோ  என கூறியுள்ளார். இது மட்டுமின்றி அரசியல் குறித்த கேள்விக்கு தற்போது நீங்கள் உங்கள் மனதில் எனக்கு பெரிய இடம் கொடுத்துள்ளீர்கள்.

தற்போதைக்கு அதுவே போதும், அரசியல் ஆசை இல்லை  என மூன்று வருடங்களுக்கு முன் கூறியுள்ளார்.

Published in சினிமா

தமிழ் சினிமாவின் அஜித், விஜய் இருவரும் அதிக அளவிளான ரசிகர்கள் கொண்ட நடிகர்கள். இருவரும் போட்டி போட்டு படங்களில் நடித்து வருகிறார்கள். 

இநிந்லையில், நடிகர் அஜீத் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து மெகா ஹிட்டான ஒக்கடு படத்தை தமிழில் நடிக்கலாம் என்று ஆசைபட்டார். 

ஆனால் அதற்குள் அதன் உரிமத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வாங்கிவிட்டார். படத்தின் உரிமத்தை வாங்கும் போதே இதில் விஜய் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 

அதன் பின்பு இயக்குநர் தரணி மூலம் விஜய்க்கு கதை சொல்ல விஜய்யும் ஓகே சொல்லி படத்தை நடித்து கொடுத்தார்.

தமிழில் ஜோதிகா அல்லது சிம்ரனை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து கடைசியில் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

நடிகர் விஜய்க்கு பெரும் திருப்பு முனையாக அமைந்த படம் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published in சினிமா

விஜய் தன்னுடைய 60வது படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜுலை 8ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், விஜய் படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தனது எடையை 10 கிலோ வரை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Published in சினிமா

சமீபகாலமாக த்ரிஷா நடித்துவரும் நாயகி, மோகினி என்கிற படங்களின் பெயர்களை பார்த்தாலே படத்தில் நாயகன் இருக்கிறாரோ இல்லையோ கதையின் பிரதான நாயகியாக த்ரிஷாதான் இருப்பார் என்றே தெரிகிறது. தற்போது மாதேஷின் இயக்கத்தில் மோகினி படத்தில் நடித்துவருகிறார் த்ரிஷா. இந்தப்படத்தில் லண்டன் வாழ இந்தியரான த்ரிஷா அங்கே சொந்தமாக பேக்கரி வைத்து நடத்துபவராக நடிக்கிறார்..இதற்கான படப்பிடிப்பு அங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, மற்ற நேரங்களில் த்ரிஷாவுக்கு பேக்கரி பற்றியும் அங்கே கேக் மற்றும் சில உணவு வகைகளை செய்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சியும் கொடுக்கப்பட்டது.. த்ரிஷாவும் அவற்றை ஆவலுடன் கற்றுகொண்டு காட்சிகளில் அவற்றை இயல்பாக பிரதிபலித்தாராம். இதற்கு முன்னர் 'பிரேமம்' படத்திற்காக நிவின்பாலியும், 'தெறி' படத்திற்காக விஜய்யும் இந்த பேக்கரி தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டவர்கள் தான். இப்போது த்ரிஷாவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார்.

Published in சினிமா
பக்கம் 1 / 3
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…