JoomlaLock.com All4Share.net

Background Video

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது.

முதல் பாகம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தை காண மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஐதராபாத்தில் பாகுபலி - 2 படத்துக்குக்கான டிக்கெட் ரூ. 5,000 க்கு விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in சினிமா

பாகுபலி-2ம் பாகம் வரும் வெள்ளி அன்று மிக பிரமாண்டமாக வெளிவருகின்றது. உலகம் முழுவதும் இப்படம் 9000 திரையரங்குகளில் வரவுள்ளதாம்.இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் தற்போது ஒரு சில நாடுகளில் தொடங்கியுள்ளது.

ஹிந்தியில் இன்று அல்லது நாளை ப்ரீமியர் காட்சி இருக்கும் என தெரிகின்றது. இந்நிலையில் படத்தின் ஒரு சில காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் யாரோ அப்லோட் செய்ய  தற்போது இது வைரலாகியுள்ளது. இது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published in சினிமா

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு ஒரே வாரத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெயில் : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் அவதியுற்று வருகின்றனர்.இந்நிலையில், திருப்பதி அருகே உள்ள வரதய்யபாளையம், ஸ்ரீகாளஹஸ்தி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் ஒரே வாரத்தில் வெயிலின் கொடுமைக்கு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வெயில் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான 200-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இப்போதே வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதத்தில் பல இடங்களில் வெப்பத்தின் அளவு 115 டிகிரியை தாண்டும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் உயிர் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Published in இந்தியா
 
 

நடிகை இலியானா மும்பையை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது ஆகிறது. தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமானார். 2006-ல் இந்த படம் வெளியானது. தொடர்ந்து விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இலியானாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை அவர் மணக்கிறார். ஆண்ட்ரூ புகைப்பட கலைஞர் ஆவார். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தனர். அப்போது காதல் மலர்ந்து சேர்ந்து சுற்றினார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வந்தார்கள். காதலை இலியானாவும் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளில் இலியானா தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு இலியானா சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் புதிய படங்களில் தற்போது அவர் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

Published in சினிமா
வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00

ஏவுகணை சோதனை வெற்றி

இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து இந்தியா தயாரித்த, தரையிலிருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை ஒடீசா மாநில கடற்கரையில், இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…