JoomlaLock.com All4Share.net

Background Video

கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் உடல்நலக்குறைவால், உயிரிழந்துள்ளார். லண்டனில், தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென்று கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 82. இதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம்தான் சந்திரஹாசனின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்த இரண்டு மாதங்களில் சந்திரஹாசனும் உயிரிழந்துள்ளார்.

 

Published in சினிமா

சென்னை: சுசித்ரா திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சிம்பு ரசிகர்களோ சுசிக்கு நீதி கேட்டு ட்விட்டரில் வாய்ஸ் கொடுத்துள்ளனர்.

பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு அதிர வைக்கிறார். தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை நாளை வெளியிடுவதாக அறிவித்து பின்னர் இன்று மாலை வெளியிடுவதாக ட்வீட்டியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு ரசிகர்களோ சுசிக்கு நீதி தேவை என்று ட்விட்டரில் குரல் எழுப்பியுள்ளனர். இது குறித்து அவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

Source: tamil.oneindia.com

சங்கங்கள்

அந்த சங்கங்கள் எல்லாம் எங்கே போனது???

 

சுசிக்கு நீதி#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman @dhanushkraja

 

பணமா?

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் அமைதியாக உள்ளது. அதிகாரமா, பணமா? பேசுங்க !! பேசுங்க !! #JusticeForSuchi#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman

ஃபேக்ட்டு ஃபேக்ட்டு

அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக யாராவது பேசினால் உடனே அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது மனஅழுத்தம் அடைந்துள்ளவர் என்கிறார்கள். ஃபேக்ட்டு

உண்மை

சுசித்ரா கார்த்திக் கூறிய அனைத்துமே உண்மை#JusticeForSuchi

#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman @dhanushkraja

சுசித்ரா

பலாத்காரம் செய்யப்பட்ட சுசித்ரா கார்த்திக்கின் கதை இதோ...#SuchitraKarthik #JusticeForSuchi #RIPTamilMedia #NoLawsInFavourOfWoman

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம் பதில் அளிக்க வேண்டும்!!!

Published in சினிமா

விஜய் தன்னுடைய 60வது படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜுலை 8ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், விஜய் படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தனது எடையை 10 கிலோ வரை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Published in சினிமா

சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து கதை மட்டுமின்றி படங்களுக்கு டைட்டீல் வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவரது கதை இலாகா இப்போது கதையை முடிவு செய்த பிறகு டைட்டீலையும் அவ்வப்போது அமர்ந்து விவாதம் நடத்துகிறார்களாம். படத்தின் உதவியாளர்கள் அனைவரிடமும் அந்த கதைக்கு எந்த மாதிரியான டைட்டீல் வைத்தால் சரியாக இருக்கும் என்று எழுதி வரச்சொல்கிறார்களாம்.அந்த வகையில், தற்போது சந்தானம் நடித்துள்ள தில்லுக்குத்துட்டு படத்தின் கதையைகூட எளிதில் முடிவு செய்து விட்டார்களாம். ஆனால் டைட்டீலை முடிவு செய்வதற்குதான் பல மாதங்களாக விவாதம் நடத்தினார்களாம். அந்த வகையில், அப்படத்தின் டைரக்டர் ராம்பாலா உள்பட உதவி இயக்குனர்கள் அனைவருமே ஆளுக்கு 50 டைட்டில்கள் வீதம் ரெடி பண்ணி சந்தானத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார்களாம். ஆனால் அவருக்கு அதில் எந்த டைட்டீலும் பிடிக்கவில்லையாம். இறுதியில் இந்த கதைக்கு தில்லுக்குத்துட்டுதான் பொருத்தமாக இருக்கும் என்று சந்தானமே டைட்டீலை முடிவு செய்து விட்டாராம்.

Published in சினிமா

அண்மைக்காலமாக பேய்ப்படங்களை மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. சமீபத்தில் வெளியான பல பேய்ப்படங்கள் தோல்வியடைந்து வருகின்றன. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனும் தன் பங்குக்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற பேய்ப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குர் ஸ்ரீதரின் காலத்தால் அழிக்க முடியாத படத்தின் தலைப்பை தான் இயக்கும் பேய்ப்படத்துக்கு சூட்டி இருக்கிறார். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது டப்பிங், ரீரெகார்டிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதற்கிடையில் நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளன. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் 'மரியம்' என்ற குழந்தை பராமரிப்பாளர் கேரக்டரில் நடிக்கிறார் ரெஜினா கெஸன்ட்ரா. வில்லியாக நந்திதா நடித்திருக்கிறாராம்.அதுமட்டுமில்லாமல், எஸ்.ஜே.சூர்யாவுக்கும், நந்திதாவுக்கும் இடையே நடைபெறும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை நடு நடுங்க வைக்கும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளதாம். செல்வராகவனின் முதல் பேய்ப்படம் என்பதால் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கலாம்! என்கிறார்கள் செல்வராகவன் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

Published in சினிமா
பக்கம் 1 / 7
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…