JoomlaLock.com All4Share.net

Background Video

விஜய் தன்னுடைய 60வது படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜுலை 8ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், விஜய் படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தனது எடையை 10 கிலோ வரை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Published in சினிமா

போடா போடி படத்தில் சிம்புவுடன் நடித்த வரலட்சுமி, அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் திரைக்கு வரவில்லை. அதனால வேகமாக வளருவார் என்று எதிர்பார்க்கப் பட்ட வரலட்சுமியை பின்னர் படங்களில் காணமுடியவில்லை. ஆனால் மூன்று வருடங்கள் கழித்து பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் கமிட்டானார். பாலே நடனம் தெரிந்தவரான வரலட்சுமி, அந்த படத்துக்காக கரகாட்ட பயிற்சியை பல மாதங்களாக எடுத்துக்கொண்டு நடித்தார். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றபோதும், வரலட்சுமியின் நடிப்பு பேசப்பட்டது. அவரையே ஹீரோ ரேஞ்சுக்கு பாலா சித்தரித்திருந்தால் மலையாளத்தில் மம்மூட்டியின் கசாபா படத்திலும் ஒரு வெயிட்டான வேடத்தில் நடிக்க கமிட்டானார் வரலட்சுமி.அந்த படத்தில் நடித்து முடித்ததுமே, தமிழில் அம்மாயி படத்தில் கமிட்டான வரலட்சுமி, கசாபா படத்தின் ரிலீசை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். காரணம், சில டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்ல வந்தபோது, கசாபா படம் வெளியான பிறகு என்னை எந்தமாதிரி வேடத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி வந்தாராம் வரலட்சுமி. அப்படி பல டைரக்டர்களை வெயிட் பண்ண வைத்த வரலட்சுமியின் முதல் மலையாள படமான கசாபா இன்று திரைக்கு வருகிறது. மேலும், இதுவரை கசாபா படத்தை பார்க்காத வரலட்சுமி தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து கண்டுகளிக்க முடிவெடுத்துள்ளாராம்.

Published in சினிமா
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

வட சென்னை படத்துக்கு ரூ.50 கோடி பட்ஜெட் !!!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சென்னையில் மீனம்பாக்கம் ஏரியாவில் உள்ள பின்னி மில்லில் மிகப்பெரிய ஜெயில் செட் போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.வட சென்னை படத்தை முதலில் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டடனர். பின்னர் மூன்று பாகமாக எடுக்கலாம் என தனுஷும், வெற்றிமாறனும் முடிவு செய்துள்ளனர். எனவே ஜெயில் செட்டில் ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என்பதால், பல மாதங்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஜெயில் செட்டை நிர்மாணித்துள்ளனர். வட சென்னை படத்துக்கு தனுஷ் ரூ.50 கோடி பட்ஜெட் என்று நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார். இந்நிலையில் தனுஷ் எம்.எல்.வாக நடிக்கும் 'வட சென்னை'யில் அவருடன் நிஜ எம்.எல்.ஏ.வான கருணாஸ் இணைந்துள்ளார்.

Published in சினிமா

அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம் என தனது ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதித்து வரும் இயக்குனர் ராதா மோகன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் உருவான உப்பு கருவாடு நல்ல வரவேற்ப்பினை பெற்ற நிலையில் தற்போது அருள்நிதி நடிப்பில் படம் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மறைந்த பிரபல நடிகர் ரவிசந்திரனின் பேத்தியான தான்யா நடிக்கிறார். இப்படத்தினை வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்ஸன் தயாரிக்கிறார், பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்ள, வசன கர்த்தாவாக பொன் பார்த்திபன் பணியாற்றுகிறார்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…