JoomlaLock.com All4Share.net

Background Video

நாய் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவ மாணவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை த்ரிஷா கோரியுள்ளார்.

இளைஞர் ஒருவர் நாயை தூக்கி கீழே வீசுவதும், அந்த நாய் கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் திங்கள்கிழமை பரவியது. ஒருவர் வீச, மற்றொருவர் படம் பிடித்துள்ளார்.

புகாரின் பேரில் விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்துதல், கொல்வது ஆகிய இந்திய குற்றவியல் தடுப்புச் சட்டம் 428, 429 ஆகிய பிரிவுகளிலும், விலங்குகள் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் 1960- ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 2 மாணவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாகர்கோயில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் கௌதம், ஆசிஸ் பால் ஆகிய இருவர்தான் நாயை துன்புறுத்தினர் என்பதும், இருவரும் குன்றத்தூர் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயில்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

விலங்குகள் நல தன்னார்வலர்கள் அந்த நாயை தற்போது பராமரித்து வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்:

'நாயைக் காப்பாற்றிய நிஜ ஹீரோக்களான ஸ்ரவன், ஜெனிஃபர், ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. இந்தக் குற்றச் செயல் புரிந்தவர்களின் மருத்துவ லைசென்ஸைச் சம்பந்தப்பட்ட துறையினர் ரத்து செய்வார்கள் என எண்ணுகிறேன்.'

த்ரிஷா ஏற்கெனவே தெருநாய்கள் மீது பரிவு காட்டி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in சினிமா

போடா போடி படத்தில் சிம்புவுடன் நடித்த வரலட்சுமி, அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் திரைக்கு வரவில்லை. அதனால வேகமாக வளருவார் என்று எதிர்பார்க்கப் பட்ட வரலட்சுமியை பின்னர் படங்களில் காணமுடியவில்லை. ஆனால் மூன்று வருடங்கள் கழித்து பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் கமிட்டானார். பாலே நடனம் தெரிந்தவரான வரலட்சுமி, அந்த படத்துக்காக கரகாட்ட பயிற்சியை பல மாதங்களாக எடுத்துக்கொண்டு நடித்தார். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றபோதும், வரலட்சுமியின் நடிப்பு பேசப்பட்டது. அவரையே ஹீரோ ரேஞ்சுக்கு பாலா சித்தரித்திருந்தால் மலையாளத்தில் மம்மூட்டியின் கசாபா படத்திலும் ஒரு வெயிட்டான வேடத்தில் நடிக்க கமிட்டானார் வரலட்சுமி.அந்த படத்தில் நடித்து முடித்ததுமே, தமிழில் அம்மாயி படத்தில் கமிட்டான வரலட்சுமி, கசாபா படத்தின் ரிலீசை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். காரணம், சில டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்ல வந்தபோது, கசாபா படம் வெளியான பிறகு என்னை எந்தமாதிரி வேடத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி வந்தாராம் வரலட்சுமி. அப்படி பல டைரக்டர்களை வெயிட் பண்ண வைத்த வரலட்சுமியின் முதல் மலையாள படமான கசாபா இன்று திரைக்கு வருகிறது. மேலும், இதுவரை கசாபா படத்தை பார்க்காத வரலட்சுமி தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து கண்டுகளிக்க முடிவெடுத்துள்ளாராம்.

Published in சினிமா
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

வட சென்னை படத்துக்கு ரூ.50 கோடி பட்ஜெட் !!!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சென்னையில் மீனம்பாக்கம் ஏரியாவில் உள்ள பின்னி மில்லில் மிகப்பெரிய ஜெயில் செட் போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.வட சென்னை படத்தை முதலில் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டடனர். பின்னர் மூன்று பாகமாக எடுக்கலாம் என தனுஷும், வெற்றிமாறனும் முடிவு செய்துள்ளனர். எனவே ஜெயில் செட்டில் ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என்பதால், பல மாதங்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஜெயில் செட்டை நிர்மாணித்துள்ளனர். வட சென்னை படத்துக்கு தனுஷ் ரூ.50 கோடி பட்ஜெட் என்று நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார். இந்நிலையில் தனுஷ் எம்.எல்.வாக நடிக்கும் 'வட சென்னை'யில் அவருடன் நிஜ எம்.எல்.ஏ.வான கருணாஸ் இணைந்துள்ளார்.

Published in சினிமா

கபாலி திரைக்கு வரும் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ரஜினியின் ரசிகர்கள். அவர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது கபாலி. 'கபாலி' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தநிலையில் இன்னும் சில தினங்களில் ரஜினியின் 'கபாலி' படம் சென்சாருக்கு செல்ல இருப்பதாகவும், பின்னர் இம்மாதம் 15-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் படத்துறையில் சொல்லப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன் திடீரென்று 'கபாலி'யின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டதான தகவல் வெளியானது. அதாவது இம்மாதம் 15 ஆம் தேதி வர வேண்டிய கபாலி 22- ஆம் தேதி 'கபாலி' ரிலீசாகிவிடும் என்று சொல்லப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின்படி, இம்மாதம் 22-ஆம் தேதி அன்றும் கூட 'கபாலி' ரிலீசாகாதாம். 'கபாலி' ஆகஸ்ட் மாதம்தான் வெளியாகும் என உறுதிபடிச் சொல்கிறார்கள். லேட்டஸ்டாக கிடைத்த தகவலின் படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு அதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 12- ஆம் தேதி வெள்ளி கிழமை அன்று 'கபாலி' திரைக்கு வருகிறது. கபாலி தேதி மாறியிருப்பதால், சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்த விக்ரமின் 'இருமுகன்', விக்ரம் பிரபுவின் 'வாகா' ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

Published in சினிமா

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்தினை சிவா இயக்க அஜீத் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க பலரின் பெயர் பரீசிலிக்கப்பட்டு வந்தது. இதற்க்காக அனுஷ்காவையும் அனுகியது படக்குழு. அவர் பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் மும்முரமாக இருந்ததாலும் அடுத்தடுத்து படங்களை ஒப்புகொண்டுள்ளதாலும் தேதிகளை பார்த்து விட்டு தனது முடிவை தெரிவிப்பதாக கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க அனுஷ்கா சம்மதம் அளித்து தேதிகளை ஒதிக்கி கொடுத்துள்ளாராம். இதனையடுத்து படப்பிடிப்புக்கு தயாராகிறது படக்குழு.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…