JoomlaLock.com All4Share.net

Background Video

 
 

நடிகை இலியானா மும்பையை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது ஆகிறது. தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமானார். 2006-ல் இந்த படம் வெளியானது. தொடர்ந்து விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இலியானாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை அவர் மணக்கிறார். ஆண்ட்ரூ புகைப்பட கலைஞர் ஆவார். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தனர். அப்போது காதல் மலர்ந்து சேர்ந்து சுற்றினார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வந்தார்கள். காதலை இலியானாவும் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளில் இலியானா தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு இலியானா சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் புதிய படங்களில் தற்போது அவர் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

Published in சினிமா

நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்திற்கு பிறகு நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஜெயம் ராஜா விறுவிறுப்பாக செய்துவருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை அனிருத் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன்-ஜெயம் ராஜா இணையவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ‘ரெமோ’ படம் வெளியான பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்புக்காக நாளை வரை காத்திருக்கவும்.

Published in சினிமா

பிரபல நடிகை எமி ஜாக்சன், பிரான்ஸ் தொழிலதிபருடன் ஊர் சுற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரிட்டன் மாடல் அழகியும், நடிகையுமான எமி ஜாக்சன், மதராசபட்டினம் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தாண்டவம், ஐ உட்பட, பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினி நடிக்கும், 2.0 படத்திலும், கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்நிலையில், பிரான்ஸ் தொழிலதிபர் ஜின் பெர்னார்ட் என்பவருடன், எமி ஜாக்சன் ஊர் சுற்றி வருவதை, தி சன் என்ற ஆங்கில நாளிதழ் படம் பிடித்து காட்டியுள்ளது. கேன்ஸ் பட விழாவில், ஜின்னை சந்தித்த எமி, அந்த நாள் முதல் தன் நட்பை வளர்த்து வந்துள்ளார். தற்போது இங்கிலாந்தின் பல இடங்களில், இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே இருப்பது, காதலா அல்லது நட்பா என, கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

Published in சினிமா

இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.

ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகமாட்டேன். என் வருங்கால கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேன்.

எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால் என் காதலருக்கு நன்கு சமைக்கத் தெரியும். நான் கோபத்துடன் பேசுவேன். அதிகம் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் அவர் மிகவும் சாந்தமாக இருப்பார். மிகவும் பொறுமைசாலி. சமூகசேவைகளில் ஆர்வமாக இருப்பார். அதனால்தான் நான் அவரைக் காதலித்தேன் என்று கூறியுள்ளார்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…