JoomlaLock.com All4Share.net

Background Video


பெங்களூரு அருகே கொனானாகுண்டா பகுதியில், திருமணத்துக்கான முதல் நாள் நடந்த முன்னேற்பாடு நிகழ்ச்சியில், உறவினர்களுக்கு சாப்பாடு போடாத காரணத்தால் இருவீட்டாருக்கும் நடந்த வாக்குவாதத்தில் மணமகள் திருமணமே வேண்டாமென நிறுத்திவிட்டார்.


நிச்சயிக்கப்பட்ட திருமண நிகழ்ச்சியில், சாப்பாடு போதவில்லை என மணமகன் வீட்டார் புகாரளித்து சண்டையிட்டுள்ளனர். பின்னர், இருவீட்டாரும் சமாதானமாகி, திருமண ஏற்பாட்டில் ஈடுபடத்தொடங்கினர்.

முதல் நாள் இரவு நடந்த இந்தச் சச்சரவால், காலையில் திருமண மேடைக்கு வராமல் மணமகள் திருமணத்தைப் புறக்கணித்துவிட்டார்.


இரு குடும்பப் பிரச்னையின் நிலைமையைப் புரிந்துகொண்டு தன்னுடன் நிற்காத ஒருவரை, தன் கணவராக ஏற்றுக்கொள்ளமுடியாது என அந்தப் பெண் தெரிவித்துவிட்டார்.


மணமகளை சமாதானப்படுத்துமாறு மணமகன் வீட்டார் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்தப் பெண் மறுத்துவிட்டார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, இருவீட்டாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Published in இந்தியா
 
 

நடிகை இலியானா மும்பையை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது ஆகிறது. தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமானார். 2006-ல் இந்த படம் வெளியானது. தொடர்ந்து விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இலியானாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை அவர் மணக்கிறார். ஆண்ட்ரூ புகைப்பட கலைஞர் ஆவார். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தனர். அப்போது காதல் மலர்ந்து சேர்ந்து சுற்றினார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வந்தார்கள். காதலை இலியானாவும் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளில் இலியானா தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு இலியானா சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் புதிய படங்களில் தற்போது அவர் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

Published in சினிமா
ஸ்ரீதேவி:

நடிகை ஸ்ரீதேவி, நடிகர் சக்ரவர்த்தியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின் தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவதாக மணந்து வாழ்ந்து வருகிறார்.

 
 ராதிகா:
நடிகை ராதிகா முதலில் 1985 ஆம் ஆண்டு இயக்குநர் பிரதாப்பை திருமணம் செய்து, 1986 இல் விவாகரத்து செய்துவிட்டார். பின் ரிச்சாட்டு ஹார்டி என்பவரை லண்டனில் 1990 ஆம் ஆண்டு திருமணம் புரிந்து, 1992 இல் விவாகரத்து செய்துவிட்டார். இறுதியில் நடிகர் சரத்குமாரை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து, தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
 
லட்சுமி:
நடிகை லட்சுமி 1969 இல் பாஸ்கர் என்பதை திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு, நடிகர் மோகன் சர்மாவை 1975 இல் திருமணம் செய்து, 1980 இல் விவாகரத்து செய்துவிட்டார். பிறகு நடிகரும், இயக்குநருமான கே.எஸ். சிவசந்திரனை காதலித்து 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
 
கமல்ஹாசன் :
 
உலக நாயகனான நடிகர் கமல்ஹாசன் தனது 24 வயதில் வாணி கணபதி என்பவரை மணந்து, பத்து வருடங்களுக்கு பின் விவாகரத்து செய்துவிட்டு, பின் நடிகை சரிகாவுடன் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தார். பின் ஸ்ருதிஹாசன் பிறந்த பின்னர் சரிகாவை மணந்தார். தற்போது கமல்ஹாசன் கௌதமியுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். -
 
கார்த்திக்:
 
நவரச நாயகன் நடிகர் கார்த்திக் 1988 இல் நடிகை ராகினியை மணந்து, பின் ராகினியின் சகோதரியான ரதியை 1992 இல் திருமணம் புரிந்தார்.
 
எம்.ஜி.ஆர் :
நடிப்பால் நிறைய மக்களைக் கவர்ந்ததோடு, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மூன்று திருமணம் நடந்துள்ளது. அவர் முதலில் தங்கமணியை மணந்தார், பின் அவர் இறக்க இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். அவரும் நோய் காரணமாக இறந்தார். இறுதியாக தமிழ் நடிகையான வி.என். ஜானகி அவர்களை மணந்தார்.
 
பிரகாஷ் :
 
நடிகர் பிரகாஷ் ராஜ் லலிதா குமாரி என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்தார். அவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். பின் அவர் தனது முதல் மனைவியை 2009 இல் விவாகரத்து செய்துவிட்டு, 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
சரத்குமார்:
 
நடிகர் சரத்குமார் 1984 இல் சாயாவை மணந்து, 2000 இல் விவாகரத்து செய்துவிட்டார். பின் நடிகை ராதிகாவை பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் 2001 ஆம் ஆண்டு மணந்தார்.
Published in சினிமா

துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் முஸ்லீம்களை கருத்தடைகளை நிராகரித்து நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

துருக்கி நாட்டு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பில் பேசிய எர்துவான் எந்தவொரு முஸ்லீம் குடும்பமும் குழந்தை பிறப்பு கட்டுப்பாடுகளை பற்றி யோசிக்க கூடாது என்றும் கட்டாயமாக வாரிசுகளை பெருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் துருக்கி அதிபர் குடும்பக் கட்டுப்பாட்டை தேச துரோக செயலாக ஒப்பிட்டதற்கும் ஆண் பெண் இருவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை நிராகரித்து பேசியதற்காகவும் மகளிர் அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உலகம்

இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.

ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகமாட்டேன். என் வருங்கால கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேன்.

எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால் என் காதலருக்கு நன்கு சமைக்கத் தெரியும். நான் கோபத்துடன் பேசுவேன். அதிகம் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் அவர் மிகவும் சாந்தமாக இருப்பார். மிகவும் பொறுமைசாலி. சமூகசேவைகளில் ஆர்வமாக இருப்பார். அதனால்தான் நான் அவரைக் காதலித்தேன் என்று கூறியுள்ளார்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…