JoomlaLock.com All4Share.net

Background Video

ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்'' என புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை விற்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசியம் இல்லை.

அதை திரும்ப பெற வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாது. ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அந்த கருத்தை நானும் வரவேற்றேன். குடும்ப நண்பர் என்ற முறையில் நான் ரஜினியை சந்தித்தேன்.

பா.ஜ. ஆட்சி பல மாநிலங்களில் நடக்கிறது. கர்நாடகா மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் நடக்கும். அப்போத தமிழகத்தில் பா.ஜ. ஆட்சி அமைக்கும்.

Published in அரசியல்
ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017 00:00

ரஜினி உயிருக்கு ஆபத்தா?

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திரை நட்சத்திரமாக இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

ரஜினியை வைத்து கபாலி திரைப்படம் எடுத்த இயக்குநர் ரஞ்சித் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க உள்ளார். மலேசியாவில் உள்ள தாதாவின் கதையை வைத்து கபாலி படம் எடுத்த ரஞ்சித் தற்போது தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற ஒரு தாதாவின் கதையை வைத்து படம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் கதைதான் ரஞ்சித் இயக்க இருக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தது. இதனையடுத்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எங்க அப்பாவை பற்றி தப்பு தப்பா எடுத்தீங்கன்னா சும்மாவிட மாட்டேன் என்று ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

இதற்கிடையில் ரஜினிக்குக் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே எழ ஆரம்பித்துள்ளது

Published in சினிமா

நடிகர் ரஜினிகாந்த் 'கபாலி' உருவத்தை கிரெடிட்கார்டுகளில் அச்சிட்டு சிட்டி பேங்க் வங்கி அவரைக் கவுரவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி ஏர் ஏசியா விமானம் ஏகப்பட்ட சலுகைகளை பயணிகளுக்கு வழங்கியுள்ளது.

மேலும் 6 மாத காலம் 'கபாலி' விளம்பரங்களைத் தாங்கி ஏர் ஏசியா விமானம் பறக்கவுள்ளது. இது தவிர கேட்பரி, அமேசான், விஎஸ் ஹாஸ்பிடல்ஸ், ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் கபாலி விளம்பர தூதர்களாக மாறியுள்ளன.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் ரஜினியின் 'கபாலி' உருவத்தை எமோடிக்கானாக வைத்துள்ளது. இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமான மக்கள் தினசரி வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் கபாலியின் புகழ் மேலும் பரவி வருகிறது. தற்போது பிரபல வங்கிகளில் ஒன்றான சிட்டி பேங்க் நிறுவனமும் 'கபாலி' விளம்பரத்தில் குதித்துள்ளது.

சிட்டி பேங்க் நிறுவனம் 'கபாலி' கிரெடிட் கார்டுகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிரெடிட் கார்டுகளிலும் ரஜினி வலம் வருகிறார். இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இந்த மாதிரியான விளம்பரங்களை யாரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Published in சினிமா

நடிகர் ரஜினி மிகவும் ஸ்டைலான மனிதர் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.

இந்தி நடிகர் அக்ஷய் குமார் 2.ஓ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அக்ஷய் குமார் சமீபத்திய பேட்டியொன்றில் ரஜினி மற்றும் ஷங்கர் இருவர் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். '' ஷங்கர் ஒரு இயக்குநர் கிடையாது அவர் ஒரு விஞ்ஞானியைப் போன்றவர்.

ஒவ்வொரு படத்துக்கு முன்பும் மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்தே அந்தப் படத்தை எடுக்கிறார். இயக்குநர் ஷங்கர் என்று கூறுவதை விட விஞ்ஞானி ஷங்கர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ரஜினியைப் பொறுத்தவரையில் சினிமா மட்டுமல்லாது அவரது நிஜ வாழ்விலும் ஸ்டைல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ரஜினி பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர்'' என்று தெரிவித்திருக்கிறார்.

அக்ஷய் நடிப்பில் அடுத்ததாக 'ருஸ்தம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் கப்பற்படை அதிகாரியாக அவர் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 'ஜாலி எல்எல்பி' (மனிதன்) படத்தின் 2 வது பாகத்திலும் அக்ஷய் நடிக்கவிருக்கிறார்.

Published in சினிமா

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மேக்ஸ் லேப் சினிமாஸ் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் என்று படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களை வாங்கி கேரளாவில் திரையிட்டு வருகிறார். அவரும் விஜய்யும் சேர்ந்து நடித்த படமான 'ஜில்லா' படத்தை தனது சம்பளத்திற்கு பதிலாக கேரள உரிமத்தை வாங்கிக் வெளியிட்டார். இதில் அவருக்கு 4 கோடி லாபம் கிடைத்தது என்பார்கள். இதுதான் ஒரு தமிழ் படத்தின் உச்சகட்ட வியாபாரமாக கேரளாவில் இருந்தது.தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படத்தை 8 கோடியே 50 லட்சம் கொடுத்து கேரள உரிமத்தை மோகன்லால் வாங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. கேரள சினிமா சரித்திரத்தில் மலையாளம் அல்லாத ஒரு படத்தின் உச்சபட்ட பிசினஸ் இதுவாகும். மம்முட்டி, மோகன்லால் நடித்த நேரடி மலையாளப் படங்களுக்கு இது இணையானதாகும்.

Published in சினிமா
பக்கம் 1 / 5
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…