JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 07 ஜூன் 2016 00:00

'கபாலியின் ': புதிய போஸ்டர்கள்

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லிங்கா படத்தையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இயக்குகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முரளி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். சென்னையில் தொடங்கிய கபாலியின் படப்பிடிப்பு கோவா, மலேசியா, சிங்கப்பூர் என அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கபாலி படத்தின் "டீசர்' அண்மையில் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், கபாலி படத்தின் பாடல்கள் ஜூன் 12 அன்று கபாலி பாடல்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Published in சினிமா

சென்னை: கபாலி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் பங்கேற்க வந்த தன்னை வரவேற்பதற்காக கேரவன் வாயிலில் காத்திருந்தார் ரஜினி என்று கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.

கபாலி படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

பேட்டி

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 'ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் பற்றி எல்லாரும் நிறைய சொல்லிக் கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். ஆனால் அந்த மனிதருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்பேன்.

வியப்பு

இப்படி ஒரு நடிகரை, மனிதரை, அற்புதமான மனிதாபிமானியை நான் எங்கும் பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் இப்படி ஒருவரை இனியும் பார்ப்பேனா என்று தெரியவில்லை.

பெரிய நடிகை இல்லை

எளிமை என்பதற்கு அர்த்தத்தை அவரைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடம் கூட இல்லை.

இதான் எளிமை

ஆனால் கபாலி முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள நான் சென்றபோது, என்னை வரவேற்க சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கேரவனுக்கு வெளியில் காத்திருந்தார். எனக்கு நடுக்கமாகிவிட்டது. அவரோ நான் இயல்பு நிலைக்கு வரும் வரை காத்திருந்து, நடிக்கச் சொன்னார். அதான் சூப்பர் ஸ்டார்!

வேறு லெவல்

நான் இதுவரை பார்த்த ரஜினி படங்களிலிலிருந்து வேறு லெவலில் இருக்கும் கபாலி. ரஜினி புதுப் பரிமாணம் காட்டியுள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் விருந்தாக இருக்கும்,' என்று கூறியுள்ளார்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…