JoomlaLock.com All4Share.net

Background Video

ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகை சமந்தாவை பக்தர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை சமந்தா திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏழுமலையான் கோவிலில் அவர் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்திற்கு பிறகு கோவிலுக்கு வெளியே வந்த போது அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சமந்தாவை சுற்றி சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர்.

இதையடுத்து அவரது தனியார் பாதுகாவலர்கள் அவரை மீட்டு காரில் அழைத்து சென்றனர்.

12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் வட சென்னை படத்திலிருந்து சமந்தா வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் புரிந்து கொள்ளவிருப்பதால் நாக சைதன்யாவின் வேண்டுகோளுக்கினங்கவே அவர் வட சென்னை படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. சமந்தா சமீப காலமாக எந்த ஒரு புது படத்தையும் ஒப்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published in சினிமா

சென்னை: சூர்யாவின் நடிப்பில் வெளியான '24' திரைப்படம் 18 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்திருகிறது.

மே 6ம் தேதி சூர்யா-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் '24'. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

3 வேடங்கள்

சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை 70 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க, உலகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் மற்றும் ஈரோஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. விஞ்ஞானி, வில்லன், மெக்கானிக் என முதன் முறையாக 3 வேடங்களில் சூர்யா இப்படத்தில் நடித்திருந்தார்.

முதல் வாரம்

வேறு பெரிய படங்கள் இல்லாத நிலையில் வெளியான '24' முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 55 கோடிகளை வசூலித்தது. இந்தியா தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பி,சி சென்டர்களில்

தமிழ்நாட்டில் இப்படம் ஏ சென்டர்களில் மட்டுமே வரவேற்பைப் பெற்றது.பி மற்றும் சி சென்டர்களில் பெரிதாக எடுபடவில்லை.எனினும் வெளிநாடுகளில் இப்படத்திற்கான வரவேற்பு இன்னும் குறையவில்லை. குறிப்பாக யூஎஸ் பாக்ஸ் ஆபீஸில் 10 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்திருக்கிறது.இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

100 கோடி

3 வாரங்கள் முடிவில் இப்படம் 100 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் வில்லன், தயாரிப்பாளர், நடிகன் என்று மூன்றிலுமே சூர்யா வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். இதுதவிர 'அஞ்சான்', 'மாசு' போன்ற தோல்விகளிலிருந்தும் சூர்யா தற்போது மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published in சினிமா

சென்னை: எனது திருமணம் எப்போது, யாருடன் என்பதையெல்லாம் நானே சொல்கிறேன். அவசரப்படாதீர்கள் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

முன்னணி நடிகையான சமந்தா பற்றி கடந்த சில தினங்களாக தொடர்ந்து சர்ச்சை செய்திகள் வலம் வருகின்றன.

வதந்திகள்

அவர் சினிமாவிலிருந்து விலகப் போவதாகவும், விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் சிலர் செய்தி வெளியிட்டிருந்தனர். ஒரு இளம் நாயகனைக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்று சமந்தாவே பேட்டி கொடுத்ததாக ஒரு நாளிதழ் தெரிவித்ததுதான் லேட்டஸ்ட்.

மறுப்பு

இந்த செய்திகளுக்கு ஒவ்வொரு முறையும் சமந்தா மறுப்பு தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. அவர் மறுப்பு தெரிவித்த அடுத்த நாள் வேறொரு வதந்தி கிளம்பும்.

நானே சொல்கிறேன்

இந்த திருமண வதந்திக்கும் சமந்தா ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், 'நானாக சொல்லும் முன் என் திருமணம் குறித்துப் பேச வேண்டாம். நான் நான் நான் சமந்தாவாகிய நானே சொல்கிறேன். நன்றி,' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ட்வீட்...

சமந்தா வெளியிட்டுள்ள ட்வீட் இதுதான்:

Published in சினிமா

இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.

ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகமாட்டேன். என் வருங்கால கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேன்.

எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால் என் காதலருக்கு நன்கு சமைக்கத் தெரியும். நான் கோபத்துடன் பேசுவேன். அதிகம் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் அவர் மிகவும் சாந்தமாக இருப்பார். மிகவும் பொறுமைசாலி. சமூகசேவைகளில் ஆர்வமாக இருப்பார். அதனால்தான் நான் அவரைக் காதலித்தேன் என்று கூறியுள்ளார்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…