வட சென்னை படத்துக்கு ரூ.50 கோடி பட்ஜெட் !!!!!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சென்னையில் மீனம்பாக்கம் ஏரியாவில் உள்ள பின்னி மில்லில் மிகப்பெரிய ஜெயில் செட் போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.வட சென்னை படத்தை முதலில் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டடனர். பின்னர் மூன்று பாகமாக எடுக்கலாம் என தனுஷும், வெற்றிமாறனும் முடிவு செய்துள்ளனர். எனவே ஜெயில் செட்டில் ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என்பதால், பல மாதங்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஜெயில் செட்டை நிர்மாணித்துள்ளனர். வட சென்னை படத்துக்கு தனுஷ் ரூ.50 கோடி பட்ஜெட் என்று நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார். இந்நிலையில் தனுஷ் எம்.எல்.வாக நடிக்கும் 'வட சென்னை'யில் அவருடன் நிஜ எம்.எல்.ஏ.வான கருணாஸ் இணைந்துள்ளார்.
நாமினேஷன்'-ல் மட்டுமே இடம் பெரும் பிரபாஸ்யின் பெயர் :ஏமாற்றும் விருதுகள்
2015ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படம் 'பாகுபலி'. இந்தியத் திரையுலகில் இப்படி ஒரு படம் எப்படி வந்தது என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் பல்வேறு தரப்பினர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் சைமா விருதுகளும், அதற்கு முன்னதாக ஃபிலிம்பேர் விருதுகளும் வழங்கப்பட்டன. ஆனால், அந்த இரண்டு விருதுகளிலுமே 'பாகுபலி' படத்திற்கு பல விருதுகள் கிடைத்தன. இருந்தாலும் அந்தப் படத்தில் சிறப்பாக நடித்த நாயகன் பிரபாஸ்-க்கு சிறந்த நடிகருக்கான எந்த விருதும் கிடைக்கவில்லை. அவருடைய பெயர் 'நாமினேஷன்'-ல் மட்டுமே இடம் பெற்றது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் விருதுகளை வழங்குபவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.சிறந்த தெலுங்கு நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது மற்றும் சைமா விருது ஆகியவை 'ஸ்ரீமந்துடு' படத்தில் நடித்ததற்காக மகேஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது. தென்னிந்திய அளவில் ஓரளவிற்கு அனைவருக்கும் பரிச்சயமான இந்த இரண்டு முக்கிய விருதுகளும் பிரபாஸுக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து டோலிவுட்டில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் ஆச்சரியமானவை. பிரபாஸ் பொதுவாக யாருடனும் அதிகம் பேச மாட்டார். குறிப்பாக மீடியா மக்களுடன் அவர் நெருக்கமாகப் பழகியதேயில்லை. மேலும் இப்படி விருதுகளை நடத்துபவர்களின் பி.ஆர்.களுடன் அவர் பேசக் கூட மாட்டார். இப்போதெல்லாம் விருதுகள் வழங்கும் விழாவுற்கு யார் வர சம்மதிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் விருதுகளையே வழங்குகிறார்கள். 'பாகுபலி' படத்தைப் பொறுத்தவரையில் பிரபாஸின் நடிப்பு இந்திய முழுவதும் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த பாராட்டை விட மற்ற விருதுகள் பிரபாஸுக்கு பெரிதில்லை என்கிறார்கள்.
சிறந்த நடிகர், நடிகை விருதை வெல்லப்போவது யார்:சைமா விருதுகள் 2016
இந்த ஆண்டிற்கான சைமா விருதுகள் விழா சிங்கப்பூரில் இன்று கோலாகலமாக தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.
இதில் தென்னிந்திய மொழிப்படங்களுக்கான சிறந்த நடிக, நடிகையர் தொடங்கி மொத்தம் 16 பிரிவுகளில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விருதுகள் தவிர நடிக, நடிகையரின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்பதால் ரசிகர்கள் விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய நட்சத்திரங்கள் அனைவரும் சிங்கப்பூரில் குவிந்துள்ளனர். இதனால் விருதுகள் விழா நடைபெறும் இடம் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போலவே காட்சியளிக்கிறது
இந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருது பிரிவில் நித்யா மேனன் (ஓகே கண்மணி), நயன்தாரா(நானும் ரவுடிதான்), ஐஸ்வர்யா ராஜேஷ்(காக்கா முட்டை) , ஜோதிகா(36 வயதினிலே), எமி ஜாக்சன்(ஐ) ஆகியோர் மோதுகின்றனர்.இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா இருவருக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிலிம்பேர் விருதுகள் விழாவில் நயன்தாரா விருதைத் தட்டிச் சென்றதால் சைமாவிலும் நயன்தாரா விருதை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல சிறந்த நடிகருக்கான பிரிவில் தனுஷ்(அனேகன்) விக்ரம்(ஐ), ஜெயம் ரவி(தனி ஒருவன்), ராகவா லாரன்ஸ்(காஞ்சனா 2) விஜய் சேதுபதி (ஆரஞ்சு மிட்டாய்) ஆகியோர் மோதுகின்றனர்.இதில் விக்ரமுக்கு ஜெயம் ரவி கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்க இன்று காலை விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் சிங்கப்பூர் ஏர்போர்ட் வந்திறங்கினர். விக்னேஷ் சிவன் டிராலியில் பெட்டி படுக்கைகளை தள்ளிக்கொண்டு செல்ல, நயன்தாரா ஹாயாக ஒரு தோள்பையை மாட்டிக் கொண்டு அவருடன் நடந்து செல்கிறார்.கோலிவுட்டின் ஹாட் ஜோடி என்பதால் இதனை யாரோ ஒரு புண்ணியவான் வீடியோவாக எடுத்து வெளியிட, இந்த வீடியோ தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.