JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

வட சென்னை படத்துக்கு ரூ.50 கோடி பட்ஜெட் !!!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சென்னையில் மீனம்பாக்கம் ஏரியாவில் உள்ள பின்னி மில்லில் மிகப்பெரிய ஜெயில் செட் போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.வட சென்னை படத்தை முதலில் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டடனர். பின்னர் மூன்று பாகமாக எடுக்கலாம் என தனுஷும், வெற்றிமாறனும் முடிவு செய்துள்ளனர். எனவே ஜெயில் செட்டில் ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என்பதால், பல மாதங்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஜெயில் செட்டை நிர்மாணித்துள்ளனர். வட சென்னை படத்துக்கு தனுஷ் ரூ.50 கோடி பட்ஜெட் என்று நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார். இந்நிலையில் தனுஷ் எம்.எல்.வாக நடிக்கும் 'வட சென்னை'யில் அவருடன் நிஜ எம்.எல்.ஏ.வான கருணாஸ் இணைந்துள்ளார்.

Published in சினிமா

தங்கமகன் படத்திற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தனுசுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, தம்பி ராமைய்யா, பூஜா ஜாவேரி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ரயிலுக்குள்ளேயே நடந்துள்ளது. இதில் தனுஷ் ரயில்வே கேன்டீன் டீபாயாக நடித்துள்ளார். ஜூலையில் இறுதியில் இப்படம் வெளியாகி விடும் என்கிறார்கள்.இதையடுத்து தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு படம் கொடி. சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். முதன்முறையாக தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுபமா நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடியாகி விட்ட போதும், ஜூலை 28-ந்தேதி தனது பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடி பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறாராம் தனுஷ்.

Published in சினிமா

வட சென்னை படத்திற்காக நடிகர் தனுஷ்  கேரம் விளையாட கற்றுக் கொண்டு வருகிறார்.

நீண்ட மாதங்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வட சென்னை படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதுகுறித்து நடிகர் தனுஷ் வட சென்னை 3 பாகங்களாக உருவாகிறது என்று தெரிவித்தார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஜெயில் அரங்குகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் கேரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாகவும், அதற்காக கேரம் விளையாட்டு வீரர் ஒருவரின் உதவியுடன் தனுஷ் கேரம் விளையாட பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வட சென்னை மக்களின் வாழ்வில் கேரம் விளையாட்டிற்கும் மிகப்பெரிய பங்குண்டு. அதுதான் கேரம் விளையாட தனுஷ் பயிற்சி எடுப்பதற்கு காரணம் என்று கூறுகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை லைக்காவுடன் இணைந்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…