JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019 00:00

2018 ன் சிறந்த வீரர், கோஹ்லி : ஐசிசி அறிவிப்பு

கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் கோஹ்லி வென்றுள்ளார்.

ஐசிசி ஆண்டுதோறும் சர் கார்பீலட் சோபர்ஸ் பெயரில் சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர், ஒருநாள் வீரர் மற்றும் கிரிகெட்டர் ஆஃப் த இயர் ஆகிய மூன்று விருதினையும் இந்தியக் கேப்டன் கோஹ்லி வென்றுள்ளார். இந்த விருதுகள் மட்டுமல்லாது டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதன் மூலம் ஒரு ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளையும் பெற்ற முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி என்ற புதிய வரலாற்றைப் பெற்றார்.

2018-ம் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 1,322 ரன்களைச் சேர்த்து சராசரி 55.08 ரன்கள் வைத்துள்ளார். 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1202 ரன்கள் சேர்த்து ,133.55 சராசரி வைத்துள்ளார்.

இந்த விருதினைப் பெறுவதில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கும் கோஹ்லிக்கும் இடையில் கடுமையானப் போட்டி இருந்தது. ஆனால் பெருவாரியான உறுப்பினர்கள் கோஹ்லிகே வாக்களித்தால் கோஹ்லிக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

 

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019 00:00

மேகதாது அணை : கர்நாடகா அறிக்கை தாக்கல்

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, மத்திய நீர் வள ஆணையத்தில், கர்நாடக அரசு, அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம், மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக திட்ட அறிக்கைக்கு, மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. சாத்தியகூறு அறிக்கை தாக்கல் செய்யும்படியும், கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தது.

இதையடுத்து, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார், நிபுணர் குழுவுடன், மேகதாதுவில், அணைகட்டும் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில், முழு சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை, மத்திய நீர் வள ஆணையத்தில், கர்நாடக அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைகளை, கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த ஐயப்ப பக்தர் சங்கமத்தில் திரண்ட கூட்டத்தால், மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். 'பினராயி விஜயனுக்கு சபரிமலை ஐதீகம் தெரியவில்லை,' என்று மடாதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 சபரிமலையில் தரிசனம் செய்யவைப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் பினராயி விஜயன். பிந்து, கனகதுர்கா என இருவரை அதிகாலையில் ஊழியர்களுக்கான வாசல் வழியாக அழைத்து சென்று தரிசனம் செய்யவைத்தார். அதன் பின் நடந்த பல முயற்சிகள் தோல்வி அடைந்தன. ஆனாலும் 51 இளம் பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக பொய் கணக்கை கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மேலும் கோபம் அடைந்தனர்.

சபரிமலை சீசன் முடிந்த நிலையில் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் 'சபரிமலை கர்ம சமிதி' ஐயப்ப பக்தர் சங்கமத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று முன்தினம் திருவனந்தபுரம் புத்தரி கண்டம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பொது மேடைகளுக்கு வராத மாதா அமிர்தானந்தமயி இந்த கூட்டத்தில் பேசியதாவது: சபரிமலை ஐதீகம் பற்றி தெரியாததால்தான் பல துரதிருஷ்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆண், பெண்களுக்கு தனித்தனி பள்ளிகள் நடத்தப்படுவதால் அது பாலின பாகுபாடு என்று கூறமுடியாது. அதுபோலதான் சபரிமலையும்.   ஒவ்வொரு  கோயிலுக்கும் 

ஒவ்வொரு ஐதீகம் உண்டு. சிலை பிரதிஷ்டைக்கு ஏற்ப ஐதீகங்கள் மாறுபடும். கடல், தொட்டியில் வளரும் மீன், ஆற்றில், நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் இவற்றில் உள்ள வித்தியாசம போல சிலை பிரதிஷ்டைக்கு ஏற்ப ஐதீகம் மாறுபடும். காலத்துக்கு ஏற்ற மாற்றம் தேவை. ஆனால் ஒரு கோயிலை பாதிக்கும் வகையில் மாற்றம் ஏற்படுத்தினால் குளிப்பாட்டி, குளிப்பாடி இறுதியில் பிள்ளை இல்லாத நிலை போல வந்துவிடும். கோயில்கள் கலாசாரத்தின் துாண்கள். அவற்றை பாதுகாக்க வேண்டும். இல்லை எனில் நூல் அறுபட்ட பட்டம் போல் ஆகிவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.

அரசின் தலையீடு:

சுவாமி சிதானந்தபுரி பேசியதாவது: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் அதை குலைக்க சதி நடக்கிறது. இந்து சமூகத்தை சபரிமலை விஷயம் மூலம் ஒருங்கிணைய செய்த பெருமை பினராயி விஜயனுக்கு மட்டுமே உண்டு. சாமியார்கள் உள்ளாடை அணிகிறார்களா என்பதை கண்காணிக்க கேரளாவில் ஒரு அமைச்சர் உள்ளார். கோயில் ஐதீகங்களில் அரசின் தலையீடு, கம்யூ., கட்சியினரையும் வேதனை அடைய செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிர்ச்சியில் பினராயி:

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அனுப்பிய வீடியோ பேச்சில், ''மத உணர்வுகளையும், பக்தர்களின் உரிமையையும் காயப்படுத்துவது சரியல்ல,'' என்றார். இந்த கூட்டத்தை கண்டு முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் ஆளும் இடது முன்னணி ஆடிப்போய் உள்ளது.

 

 
 


சென்னையை சேர்ந்த 12 வயது குகேஷ் என்ற சிறுவர், உலகின் 2வது இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்தா குகேஷ், தினேஷ் சர்மாவை 9வது சுற்றில் வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். இதன் மூலம் உலகிலேயே மிக இளைய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் என்பவர் உலகின் முதலாவது இளவயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ் கூறியதாவது: முதல் சுற்று முடிந்ததும் பதற்றமடைந்தாலும், போட்டியாளர் செய்த தவறான நகர்வை சாதகமாக்கி வெற்றி பெற்றேன். எனக்கு உறுதுனையாக இருந்த பள்ளி, பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இதேபோல் இன்னும் சிறப்பாக பயிற்சி செய்து உலக சாம்பியனாக வேண்டும் என்பதே எனது லட்சியம். அனைத்து சதுரங்க போட்டிகளிலும் அழுத்தம் அதிகமாக இருந்தது, ஆனால் என் விளையாட்டை பாதிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

மிக இளவயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவர் குகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டு மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. . இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. ஐ.சி.சி. போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ரவுன்ட் ராபின் அடிப்படையில் லீக் சுற்று நடக்கிறது. அதாவது பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்க வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்தப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில்பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்-இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பரம வைரிகள் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9-ந்தேதி லண்டன் ஓவலில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14-ந்தேதி நடக்கிறது. ஜூலை 15-ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும்.

உலககோப்பைபோட்டிஅட்டவணை

கார்டிஃப்வேல்ஸ்ஸ்டேடியம்,கார்டிஃப்

1ஜூன்-நியூசிலாந்துvஇலங்கை(பகல்)
4ஜூன்-ஆப்கானிஸ்தான்vஇலங்கை(பகல்)
8ஜூன்-இங்கிலாந்துvவங்காளதேசம்(பகல்)
15ஜூன்-தென்னாப்பிரிக்காvஆப்கானிஸ்தான்(பகல்/இரவு)

கவுண்டி மைதானம் பிரிஸ்டல்

1ஜூன்-ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா(பகல்/இரவு)
7ஜூன்-பாகிஸ்தான்vஇலங்கை(பகல்)
11ஜூன்-வங்காளதேசம்vஇலங்கை(பகல்)

கவுண்டிகிரவுண்ட்டவுன்டன்,டவுன்டன்

8ஜூன்-ஆப்கானிஸ்தான்vநியூசிலாந்து(பகல்/இரவு)
12ஜூன்-ஆஸ்திரேலியாvபாகிஸ்தான்(பகல்)
17ஜூன்-வெஸ்ட் இண்டீஸ்வங்காளதேசம்(பகல்)

எட்க்பாஸ்டன்,பர்மிங்காம்

19ஜூன்-நியூசிலாந்துvதென்னாப்பிரிக்கா(பகல்)
26ஜூன்நியூசிலாந்துvபாகிஸ்தான்(பகல்)
30ஜூன்-இங்கிலாந்துvஇந்தியா(பகல்)
2ஜூலை-வங்காளதேசம்vஇந்தியா(பகல்)
11ஜூலை-இரண்டாவது அரை இறுதி(2 v 3) (பகல்)
12ஜூலை-ரிசர்வ் டே

ஹாம்ப்ஷயர்பவுல்,சவுத்தாம்ப்டன்

5ஜூன்-தென்னாப்பிரிக்காvஇந்தியா(பகல்)
10ஜூன்-தென்னாப்பிரிக்காvவெஸ்ட்இண்டீஸ்(பகல்)
14ஜூன்-இங்கிலாந்துvவெஸ்ட்இண்டீஸ்(பகல்)
22ஜூன்-இந்தியாvஆப்கானிஸ்தான்(பகல்)
24ஜூன்-வங்காளதெசம்vஆப்கானிஸ்தான்(பகல்)

ஹெட்பிங்லே,லீட்ஸ்

21ஜூன்-இங்கிலாந்துvஇலங்கை(பகல்)
29ஜூன்-பாகிஸ்தான்vஆப்கானிஸ்தான்(பகல்)
4ஜூலை-ஆப்கானிஸ்தான்vவெஸ்ட்இண்டீஸ்(பகல்)
6ஜூலை-இலங்கைvஇந்தியா(பகல்)

லார்ட்ஸ்,லண்டன்

23ஜூன்-பாகிஸ்தான்vதென்னாப்பிரிக்கா(பகல்)
25ஜூன்-இங்கிலாந்துvஆஸ்திரேலியா(பகல்)
29ஜூன்-நியூசிலாந்துvஆஸ்திரேலியா(பகல்/இரவு)
5ஜூலை-பாகிஸ்தான்vவங்காளதேசம்(பகல்/இரவு)
14ஜூலை-இறுதிப்போட்டி(பகல்)
15ஜூலை-ரிசர்வ் டே

ஓல்ட்டிராஃபோர்ட்,மான்செஸ்டர்

16ஜூன்-இந்தியாvபாகிஸ்தான்(பகல்)
18ஜூன்-இங்கிலாந்துvஆப்கானிஸ்தான்(பகல்)
22ஜூன்-வெஸ்ட்இண்டீஸ்vநியூசிலாந்து(பகல்/இரவு)
27ஜூன்-வெஸ்ட்இண்டீஸ்vஇந்தியா(பகல்)
6ஜூலை-ஆஸ்திரேலியாvதென்னாப்பிரிக்கா(பகல்/இரவு)
9ஜூலை-முதல்அரையிறுதி(1 v 4) (பகல்)
10ஜூலை-ரிசர்வ் டே

திஓவல்,லண்டன்

30 May -இங்கிலாந்துvதென்னாப்பிரிக்கா(பகல்)
2ஜூன்-தென்னாப்பிரிக்காvவங்காளதேசம்(பகல்)
5ஜூன்-வங்காளதேசம்vநியூசிலாந்து(பகல்/இரவு)
9ஜூன்-இந்தியாvஆஸ்திரேலியா(பகல்)
15ஜூன்-இலங்கைvஆஸ்திரேலியா(பகல்)

திரிவர்சைடு,செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்

28ஜூன்-இலங்கைvதென்னாப்பிரிக்கா(பகல்)
1ஜூலை-இலங்கைvவெஸ்ட்இண்டீஸ்(பகல்)
3ஜூலை-இங்கிலாந்துvநியூசிலாந்து(பகல்)

ட்ரெண்ட்பிரிட்ஜ்,நாட்டிங்காம்

31 May -வெஸ்ட்இண்டீஸ்vபாகிஸ்தான்(பகல்)
3ஜூன்-இங்கிலாந்துvபாகிஸ்தான்(பகல்)
6ஜூன்-ஆஸ்திரேலியாvவெஸ்ட்இண்டீஸ்(பகல்)
13ஜூன்-இந்தியாvநியூசிலாந்து(பகல்)
20ஜூன்-ஆஸ்திரேலியாvவங்காளதேசம்(பகல்)

பக்கம் 1 / 2331
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…