JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

இனி புதுப்படம் வெளியீடு இல்லை : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

திரையரங்குகளில் படத்தை திரையிடுவதற்கான கியூப் கட்டண உயர்வை கண்டித்து இன்று முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற தயாரிப்பார் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. தென்னிந்திய மொழி திரைத்துறைகள் இணைந்து இந்த ஸ்டிரைக் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அவரசக்கூட்டம் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும். புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் அனுப்புவது. இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்வது.டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்களுடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்தவித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.இதுவரை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த வி.எப்.எப் கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இனி கையாளுதல் கட்டணம் (ஹேண்ட்லிங் சார்ஜ்) மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே புரஜக்டர், சர்வர்களை சொந்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

அந்த திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டுமாய் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தெனிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குனர் சங்கம், தெனிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கேட்டு கொள்கிறோம்.

இந்த பிரச்சனை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த நலன் கருதி நமது சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவினை மீறும் எந்த ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read 101 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…