JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

சென்னை : கல்லூரி வாயிலில் மாணவி குத்திக் கொலை

 சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சென்னை கேகே நகரில் மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி அஸ்வினி. வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அஸ்வினியை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கத்தியால் குத்திய இளைஞரை பொது மக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்தவர் செஞ்சியை சேர்ந்த அழகேசன் என்பதும், சுகாதார துறையில் பணிபுரிந்து வரும் அவர் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அஸ்வினி அளித்த புகாரின் பேரில் அழகேசனை போலீசார் கைது செய்யப்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த அழகேசன் கொலை செய்ததாக தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் , சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read 132 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…