JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்துக்கு இன்று நீர்திறந்து வைக்கப்பட்டது. அணை கட்டி, 84 ஆண்டுகளான நிலையில், முதல்முறையாக, முதல்வர், பாசன நீரை திறந்து வைத்தார்.

நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி; மொத்த கொள்ளளவு, 93.47 டி. எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழையால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின. 

அதில் திறக்கப்படும் உபரிநீர், தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று, அணைக்கு வினாடிக்கு, 1.14 லட்சம் கனஅடி நீர் வந்தது. கடந்த ஜூன், 17ல், 40 அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 104 அடி, 12 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 69 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. இன்று அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது. அணைக்கு, காலை நிலவரப்படி, 1.10 லட்சம் கன அடி வந்து கொண்டிருந்தது. 

திறப்பு

முதல்வர் பழனிசாமி, டெல்டா பாசனத்துக்கு, இன்று (ஜூலை 19) காலை, 10. மணிக்கு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். அணை கட்டி, 84 ஆண்டுகளான நிலையில், முதல் முறையாக, தமிழக முதல்வர், பாசன நீரை திறந்து வைத்தார். முதல் கட்டமாக, அணையில் வினாடிக்கு, 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 

டெல்டா பாசனத்துக்கு குறித்தபடி, ஜூன், 12ல், 15 முறை, ஜூன், 12க்கு முன்னதாக, 11 முறை, ஜூன், 12க்கு பின் தாமதமாக, இன்றுடன், 59 முறை பாசனத்துக்கு நீர்திறக்கப்படுகிறது.

சட்டப்போராட்டம்

தொடர்ந்து, இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது காவிரி குறித்து ஆலோசனை நடத்தியவர் ஜெயலலிதா. அதிமுக அரசு நடத்திய சட்ட போராட்டம் காரணமாக தான் காவிரி நீர் வந்துள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தண்ணீர் திறக்கப்படும். கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்வது உறுதி செய்யப்படும் எனக்கூறினார்.

 

 

 

Read 70 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…