JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கு : ஐகோர்ட் உத்தரவு

ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாள் உற்சவர் சிலை கடத்தல் தொடர்பாக, 2017 அக்டோபரில் அளித்த புகாரை விசாரித்து, 6 வாரத்திற்குள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆகம விதிப்படி, பொன். மாணிக்கவேல் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு தொடர்பான வழக்கில், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், திருமகளை கைது செய்ய 6வார காலம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

இதனை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த முறையீட்டை விசாரித்த கோர்ட், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்ததுடன், மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பதிலளிக்க தமிழக அரசு கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Read 28 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…