JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

1.35 லட்சம் கன அடி நீர் திறப்பு : 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா அணைகளில், வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. எட்டு மாவட்ட மக்களுக்கு, மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துஉள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. இதில், 93.47, டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின. அங்கு திறக்கப்பட்ட உபரி நீரால், ஜூலை, 23ல், மேட்டூர் அணை நிரம்பியது. இங்கிருந்து, டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பதால், நேற்று, அணை நீர்மட்டம், 117.50 அடியாக சரிந்தது.

இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், இவற்றின் உபரி நீர், தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.

கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் உபரி நீர் திறப்பு, நேற்று மாலை, .35 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கபினியில் இருந்து, 80 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ்.,சில் இருந்து, 55 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், இன்று காலை முதல், தொடர்ச்சியாக வரும் என்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென உயரும். கர்நாடகா அணைகளில், உபரி நீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், வினாடிக்கு, 17 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, நேற்று மதியம், 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதி, 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. நாளை, மேட்டூர் அணைக்கு வரும் நீரில் பெரும் பகுதி, உபரி நீராக திறக்க வாய்ப்புள்ளதால், காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் முதல் டெல்டா பாசன பகுதிகள் வரை, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை ஆகிய எட்டு மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு, மத்திய அரசு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, 9,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று, 32வது நாளாக, அருவிகளில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Read 27 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…