JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' : திமுக கோரிக்கை

தி.மு.க., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான, கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கருணாநிதி, பாரத ரத்னா ராஜ்யசபாவில், நேற்று, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது; திராவிட இனத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 80 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். தத்துவ மேதை அவரது புகழ் மகுடத்தில், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, தத்துவ மேதை, நாடக ஆசிரியர், நடிகர் என, எத்தனையோ பெருமைகள் பதிந்துள்ளன.

தான் தடம் பதித்த, அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தவர். இணையற்ற அந்த தலைவரின் புகழை, வார்த்தைகளால்விவரிக்க இயலாது. கடைசி மூச்சு வரையில், சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்காக போராடியவர்.ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை, இழிவான சொற்களால் அழைக்கப்படுவதை நீக்கி, மதிப்புமிகு சொற்களை சூட்டியவர்.

குடிசைகள் இருக்கும் இடங்கள் எல்லாம், குடியிருப்புகள் இருக்க வேண்டுமென, செய்தவர்.இத்தகைய பெருமைமிகு தலைவருக்கு, நாட்டின் மிக உயர்ந்த விருதான, 'பாரத ரத்னா' வை வழங்க வேண்டும். அது தான், அவருக்கு செய்யும் பொருத்தமான மரியாதையாக அமையும்.இவ்வாறு, சிவா பேசினார்.

அப்போது, அனைத்து, எம்.பி.,க்களும், மேஜைகளை தட்டி, வரவேற்பு தெரிவித்தனர். ராஜ்யசபா காலையில் கூடியதும், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப, எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தன.ஆனாலும், முதல் அலுவலாக, மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசப் போகிறார் என்பதை அறிந்ததும், சபையில் உள்ள எல்லா, எம்.பி.,க்களும் அமைதி காத்தனர்.வேறு சில விஷயங்கள் குறித்து பேசவும், எம்.பி.,க்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அதற்கெல்லாம் இடம் தராமல், சிவா பேசி முடித்ததுமே, எதிர்க்கட்சிகளின் அமளியும், ரகளையும் துவங்கியது.

Read 61 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…