JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பிய நிலையில், ஓரிரு நாட்களிலேயே மீண்டும் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் இரண்டு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த்துக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் விஜயகாந்த் இருந்தாலும், அவ்வப்போது அரசியல் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு தேமுதிக சார்பான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சர்வதேச சாதனையாளர் விருது பெற்ற நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். என்றாலும் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் விஜயகாந்த் உள்ளதால் ஓரிரு தினங்களிலேயே வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

R

Read 39 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…