JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம் பாயும்

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் பாபு என்பவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தல் மணல் என்று தெரியாமல் பாபு லாரியை ஓட்டியதால் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியன், எஸ்.ராமதிலகம் அடங்கிய அமர்வு பாபு மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து கடந்த மே மாதம் உத்தரவிட்டனர்.

மேலும் அரசு அதிகாரிகளின் உடந்தை இல்லாமல் மணல் கடத்தல் சாத்தியம் இல்லை. அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு சட்டத்தில் வழிவகை இருந்தும் இதுவரை ஒரு வழக்குக் கூட பதிவு செய்யப்படவில்லை. மணல் கடத்தல் வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை டிஜிபி மூலம் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

Read 41 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…