JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

அக்டொபர் - 7 : ரெட் அலர்ட் எதிரொலி  - மலை கடல் பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு

தமிழகத்திற்கு அக்.,7 ம் தேதி வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து மலை மற்றம் கடல் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயில், சாஸ்தா கோயில், ஐயனார்கோவில் ஆற்று படுகைகளுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் அரிச்சல்முனைக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அக்.,8 வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் பேரிஜம் அருவிக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read 56 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…