JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது

எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு நெல்லை பல்கலையின் மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தனார் பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழில் கலை, பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. 

2014ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த விருது முதன்முதலாக பேராசிரியர் இளையபெருமாள், பாரதி ஆய்வாளர் சீனிவிஸ்வநாதன் ஆகியோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. 2015ல் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியனுக்கும், 2016ல் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் கலாப்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது இயற்பெயர் சோமசுந்தரம். 1950ல் பிறந்தவர். நெல்லை மாவட்டம் கடையநல்லுார் அருகே இடைகாலில் வசிக்கிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1970களில் இருந்து எழுதிவருகிறார். கவிதைக்காக கலாப்ரியா என்னும் புனைப்பெயரில் எழுத துவங்கி அதுவே அவரது இலக்கிய அடையாளமாக மாறிவிட்டது. 

தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது, கண்ணதாசன் விருது, திருப்பூர் தமிழ்சங்க விருது, சென்னை புத்தக கண்காட்சி அமைப்பாளர்களின் கருணாநிதி பொற்கிழி விருது ஆகியன குறிப்பிடத்தகுந்தவை. வேனல் இவர் அண்மையில் எழுதிய நாவல் ஆகும். சுந்தரனார் விருது வரும் 12ம் தேதி நெல்லை பல்கலை வளாகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

தமிழக கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் வழங்குகிறார். துணைவேந்தர் பாஸ்கர் பாராட்டுகிறார். ஒரு லட்சம் ரூபாய் பரிசும், விருதும் பட்டயச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.

Read 27 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…