JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' : மத்திய அரசு உறுதி

 'மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை' என, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மத்திய அரசு உறுதி அளித்தது. மதுரை,தோப்பூர்,எய்ம்ஸ்,ஐகோர்ட்,மத்திய அரசு,உறுதி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. அதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கி, டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும். பிரதமர் அலுவலக முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது.

மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில் கூறியதாவது: தோப்பூரில்தான், எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. மத்திய அரசு அறிவிப்பில் தெளிவாக உள்ளது. இதில் மாற்றம் இல்லை. அங்கு, 'எய்ம்ஸ்' அமைப்பதற்கான நடைமுறை துவங்கி விட்டது. இதுதொடர்பாக பிரதமரிடம், முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மனுதாரர் தேவையின்றி, விளம்பர நோக்கில் மனு செய்துள்ளார். இவ்வாறு அவர் வாதிட்டார். மத்திய நிதித்துறை, சுகாதாரத்துறை செயலர்கள், தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அக்., 29க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Read 29 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…