JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

சென்னை, ஆந்திராவில் நில அதிர்வு

சென்னைக்கு வடகிழக்கு வங்கக்கடலில் 600 கி.மீட்டர் தொலைவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.9 ஆக பதிவானது. இதன் காரணமாக சென்னை, ஆந்திரா மாநிலங்களில் சில பகுதி்களில் நில அதிர்வு உணரப்பட்டது. பெரும் சேதம் ஏதும் இல்லை. 

வங்க கடலில் 40. கி.மீ,.,ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து 400 கிமீ தொலைவில் கடலில் நிலநடுக்கம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று காலை 7.02 மணியளவில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ., தொலைவில், கடல் மட்டத்திற்கு கீழ் 10 மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.

அதிர்வானது, வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேர் பகுதிகளில் உள்ள நிலநடுக்க கருவிகளில் பதிவாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. கடல் பகுதியில் ஏற்பட்டதால், பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read 150 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…