JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின்  மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை

சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னையில் கடந்த 2017-ஆம் ஆண்டில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறையினர், ரூ.78 கோடி மதிப்பிலான பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தெற்காசிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டு, அவை வெளிநாட்டு பணமாக மாற்றப்பட்டதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை மண்ணடியைச் சேர்ந்த லியாகத் அலி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.78 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டதும், இந்த மோசடியின் மூளையாக திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன் செயல்பட்டதும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர் மணி அன்பழகனை கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மணி அன்பழகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகை ரூ.1 கோடியை செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Read 30 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…