JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு

தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் இன்றும் அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் நாளையும் பதவியேற்க உள்ளனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் அ.தி.மு.க. ஒன்பது இடங்களிலும், தி.மு.க. 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.

தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.சபாநாயகர் அறையில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்பது பேர் நாளை காலை பதவியேற்க உள்ளனர். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Read 213 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…