JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

அத்தி வரதர் தரிசனம் : குலுங்கியது காஞ்சி

அத்திவரதர் பெருவிழாவின் 43-ஆவது நாளான திங்கள்கிழமை ஒரே நாளில் 5 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நகரம் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது. 

மஞ்சள் நிறப் பட்டாடையில் அத்திவரதர்: அத்திவரதர் பெருவிழாவின் 43-ஆவது நாளான திங்கள்கிழமை பெருமாள் மஞ்சள் நிறப் பட்டாடையும், பச்சை நிற அங்கவஸ்திரமும் அணிந்து, பழங்களால் செய்யப்பட்ட ராஜ கிரீடமும், சிவப்பு, வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட வரிமாலை, மகிழம்பூ மாலைகள் சூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையும், மாலையும் பட்டாச்சாரியார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

வரலாறு காணாத மக்கள் வெள்ளம்: அத்திவரதர் பெருவிழாவுக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களாக இருந்ததால் இவ்விரு நாள்களும் சுமார் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளாக இருந்ததால் காஞ்சிபுரம் நகர் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. திருக்கோயிலின் வடக்கு மாட வீதி,திருக்கச்சி நம்பி தெரு, கிழக்கு கோபுர வாசல், செட்டித் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம், கூட்டமாக காணப்பட்டனர்.

முக்கியஸ்தர்கள் வரும் பாதையில் உள்ள பொம்மைக்காரத்தெரு, ஆணைக்கட்டித்தெரு, அமுதப்படித் தெரு, அஸ்தகிரித் தெரு ஆகிய பகுதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

முக்கியஸ்தர்கள் வரிசையில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்: திங்கள்கிழமை வி.வி.ஐ.பி. வரிசையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. முக்கியஸ்தர்களுக்கான வரிசையில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதாகக் கூறி பக்தர்கள் கைகலப்பில் ஈடுபட்ட போது அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

முக்கியஸ்தர்கள் வரிசையில் காலையில் இருந்த கூட்டத்தை விட மாலையில் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. கோயிலுக்கு உள்ளே சுவாமி தரிசனம் செய்யச் சென்றவர்கள் விரைவாக வெளியில் வர முடியாமலும், வெளியில் இருப்பவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளே போக முடியாமலும் அவதிப்பட்டனர். 

முக்கியஸ்தர்கள் வரிசையில் கூட்ட நெரிசலில் சிக்கி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த புஷ்பா(44), ஈரோடு பகுதியைச் சேர்ந்த கௌசிக் (15) உள்பட 40-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.

மயக்கமடைந்தவர்களை காவல்துறையினர் உடனடியாக கூட்டத்திலிருந்து வெளியில் தூக்கி வந்து, அருகில் உள்ள மருத்துவ முகாம்களில் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். காவல்துறையினரின் மனித நேய செயல்பாடுகளை பக்தர்களும் வெளிப்படையாக பாராட்டினார்கள். 

Read 106 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…