JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

வரையாடுகள் எண்ணிக்கை உயர்வு

தமிழகம், கேரளாவில், நான்கு ஆண்டுகளில் வரைஆடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டில், 78.4 சதுர கி.மீ., பரப்பளவில் முக்கூர்த்தி தேசிய பூங்கா உள்ளது. தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள், இங்கு பரவலாக உள்ளன.

அழிவின் பிடியில் உள்ள வரையாடுகளை பாதுகாக்க, அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.நடப்பாண்டு, மே மாதம், மூக்கூர்த்தி, ஆனைமலை மற்றும் கேரளாவில் சைலன்ட் வேலியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், வரையாடுகளின் எண்ணிக்கை, 612 ஆக உயர்ந்துள்ளது.

இது, நான்கு ஆண்டுகளை விட, 27 சதவீதம் அதிகம்.இதன்படி, '2016 - 480; 2017 - 438; 2018 - 568; 2019 - 612,' என, இதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இது, வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்ரியா கூறுகையில், ''நம் மாநிலத்தில், வரையாடுகளை பாதுகாக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், நடப்பாண்டில் இதன் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது,'' என்றார்.

Read 44 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…