JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

எனது சுயசரிதையில் சூரிய மின்தகடு முறைகேடு குறித்த உண்மைகளை வெளியிடுவேன்: சரிதா நாயர்

என்னுடைய சுயசரிதை புத்தம் விரைவில் வெளிவர உள்ளது. அதில், சூரிய மின்தகடு முறைகேடு குறித்த அனைத்து உண்மைகளும் இடம்பெறும் என அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் தெரிவித்தார்.

கோவை, வடவள்ளியில் உள்ள சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை நிறுவனத்தின் இயக்குநர்களான சரிதா எஸ்.நாயர், இவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் நாயர், ஆர்.சி.ரவி ஆகியோர் காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி ரூ. 26 லட்சம் மோசடி செய்ததாக, கடந்த 2009-ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, 6-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு குறித்த விசாரணை நீதிபதி ராஜவேல் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சரிதா நாயர் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சூரிய மின்தகடு முறைகேடு தொடர்பாக 90 சதவீத ஆதாரங்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் கேரளாவில் புதிதாக பொறுப்பேற்ற அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இந்த முறைகேட்டில் சிக்கியவர்களிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. எனது சுய சரிதையை தமிழ் பத்திரிகை ஒன்று வெளியிட உள்ளது. அதில், முறைகேடு மற்றும் நான் ஊழலில் சிக்கிய சூழ்நிலை குறித்த தகவல்கள் விரிவாக இடம்பெறும். சூரிய மின்தகடு முறைகேடு வழக்கில் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறேன் என்றார்.

நேற்று நடைபெற்ற விசாரணையில் சரிதா நாயரின் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை.

Read 262 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…