JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

நில மோசடி வழக்கு : கருணாநிதி மகள் செல்விக்கு 4 வார காலம் அவகாசம்

சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த வி.நெடுமாறன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2012–ம் ஆண்டு அளித்த புகாரில், ‘‘தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் செல்வியும், அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணியும், செங்கல்பட்டு அருகே உள்ள தாழம்பூர் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான 2.94 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்யப்போவதாக கூறினர்.

அதற்காக ரூ.3.50 கோடி வரைவோலையாகவும், ரொக்கமாகவும் அளித்தேன். அவர்கள் பத்திரம் பதிவு செய்து தராததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு என்னை இருவரும் மிரட்டினார்கள்’’ என்று கூறி இருந்தார்.

அந்த வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில், செல்வி தரப்பில் ‘‘மனுதாரர் மிரட்டியதாக கூறிய அன்று நான் சென்னையில் இல்லை. அன்றைய தினம் காலையில் கொல்கத்தாவுக்கு சென்று விட்டு, இரவுதான் சென்னை திரும்பினேன். என் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்கவேண்டும்’’ என செல்வி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கில் இருந்து கருணாநிதி மகள் செல்வியை விடுவித்து கடந்த ஜனவரி மாதம் 12–ந் தேதி உத்தரவிட்டது.

 சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மற்றும் வி.நெடுமாறன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். கடந்த ஏப்ரல் 1–ந் தேதியன்று இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு செல்வி 6 வாரங்களுக்குள் விளக்கம் அனுப்புமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜரானார். அப்போது, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் செல்விக்கு அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் நோட்டீசு அவருக்கு சேரவில்லை என்று நீதிபதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மேலும் 4 வார கால அவகாசம் அளித்து நோட்டீசை நேரடியாக அவரிடமே (செல்வி) ஒப்படைக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read 364 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…