JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

இன்றைக்கு கமல் - தினமொரு அறிக்கை : ‘பிக் பாஸ்’ பிரபலமடைவதற்கான தந்திரமா ?

ஒவ்வொரு வாக்காளனிலும் தலைவன் இருக்கின்றான் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் நடிகர் கமலை மிரட்டுவதாக ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு நடிகர் கமல் நன்றி தெரிவித்து டுவிட்டர் பதிவிட்டிருந்தார்.

அதில் குறிப்பிட்டிருந்ததாவது :‛‛ அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே.

ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது.என கூறி உள்ளார்.

முன்னதாக கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின் : ‛‛ மக்கள் கருத்தை பிரதிபலித்த நடிகர் கமலஹாசனை அமைச்சர்கள் சட்டத்தை காட்டி மிரட்டுகின்றனர்.

ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் உள்ள உண்மைகளை திருத்தி கொள்வதே ஜனநாயக ஆட்சி, கமல் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பது விமர்சிப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல், நடிகரின் கமலின் கருத்தே தமிழக மக்களின் கருத்தாகும். '' என கூறியிருந்தார். 

தினம் பெட்ரோல் விலை, வானிலை அறிக்கை போல தினமும் செய்திகளில் வந்து போக பொழுதொரு அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் கமல். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பிரபலமடைவதர்கான தந்திரமா ?

Read 65 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…