JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

பஸ் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் : மக்கள் அவதி

 கோரிக்கையை ஏற்காததால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து போராட்டம் உடனே துவங்கியது.

தொழிற்சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்ட 2.57 என்ற ஊதிய காரணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கருடன், நடந்த பேச்சுவாரத்தையில் ஒப்புதல் தராததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து காலவரையற்ற போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் உடனே துவங்கியது.

சிஐடியூ சவுந்தரராஜன் தெரிவித்ததாவது: 2.44 ஊதிய காரணியை எக்காலத்திலும் நாங்கள் ஏற்க மாட்டோம். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க அரசு மறுப்பது ஏன்? எங்களது கோரிக்கையை கருணையுடன் பார்க்க அரசு தவறிவிட்டது. போக்குவரத்து துறையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு நாங்களா காரணம். அரசே கஷ்டத்தை தாங்க முடியாவிட்டால், தொழிலாளி எப்படி கஷ்டத்தை தாங்குவார்கள். நீதிமன்றத்தில் முறையிட்டால் அங்கு எங்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைப்போம். வேலை நிறுத்தத்திற்கு அரசு தான் காரணம். நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஊதிய உயர்வு குறித்த கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்; பஸ்களை இயக்க மாட்டோம் என தொ.மு.ச., தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் 13 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. பஸ்கள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் கடும் அவதிக்குள்ளாவர்.

Read 59 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…