JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு : மசோதா சட்டசபையில் தாக்கல்

எம்எல்ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில், முதல்வர் பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்களின் மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக, இம்மாதம் முதல் உயர்த்தப்படும் எனவும் தொகுதி மேம்பாட்டு நிதியும், 2.5 கோடி ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் பிப்ரவரி மாதம் எம்எல்ஏக்களுக்கு நிலுவை தொகையுடன் ரூ. 3 லட்சம் கிடைக்கும்.

எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில், சம்பள உயர்வு மசோதா அறிமுகபடுத்தப்பட்ட பின்னர் திமுக கொறடா எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். பஸ் ஊழியர்கள் போராடி வரும் நிலையில், நிதி நெருக்கடியில் உள்ளதாக அரசு கூறும் நிலையில் சம்பளம் உயர்த்தப்பட்டால் மக்கள், எம்எல்ஏக்களை பார்த்து எள்ளி நகையாடுவர். இவ்வாறு அவர் கூறினார்.


Read 59 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…